Sunday, February 21, 2010

இமாம் புகாரி

இமாம் புகாரி


புகாரி ஷரீபின் அரபி மூலத்தின் ஆசிரியர் அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயில் பின் இப்ராஹீம் பின் முஃகீரா பின் பர்திஸ்பா அல்ஜூஅஃபி அல்புகாரீ (ரஹ்) அவர்கள் ஆவார். இன்றைய ரஹயக் குடியரசுகளில் ஒன்றான உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு (கி.பி.810) ஹவ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு அன்னார் பிறந்தார்கள்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த அன்னார் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். உள்;ரிலேயேஆரம்பக் கல்வியைக் கற்று முடித்த பின் தாயார் மற்றும் சகோதரரருடன் தமது 12ஆவது வயதில் (ஹிஜ்ரி206இல்) ஹஜ் புனித்ப பயணம் மேற்கொண்ட அன்னார் ஹதீஸ் எனும் நபிமொழிகளைத் திரட்டுவதற்காக திரு மக்காவிலிலேயே தங்கிவிட்டார்கள்.

திருமக்கா மதீனா உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் ஆறாண்டுகள் தங்கியிருந்த இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் நபிமொழிகளை அறிந்திருந்தோரிடமிருந்து நேரடியாக அவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்காக எகிப்து சிரியா இராக் முதலான நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார்கள். அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து அன்னார் கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல லட்சங்களாகும் இருப்பினும்.நம்பத் தகுந்த ஆதாரப்பூர்வமான அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே இந்நூலில் இடம் பெறச் செயவதற்கு அன்னார் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563. இவற்றில் திரும்பத் திரும்ப வரும் நபிமொழிகளை நீக்கிப் பார்த்தால் சுமார் 4000 நபிமொழிகளே மிங்சும். இந்த எண்ணிக்கையே இமாம் இப்னுஹஜ்ர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்களின் விரிவவுரை மூலத்தில் காணப்படுகிறது.

இந்நூலுக்கு இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் சட்டிய முழுப்பெயர் அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹூல் முக்தஸர் பின் கனனி ரசலில்லாஹி (ஸல்) வ அய்யமிஹி ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் முறிவுறாதா. நிபந்தனைகளுக்குட்பட்ட அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்ற அல்லாஹ்வின் திருத் தூதர்(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் வாழ்க்கைச் சரிதை குணநலன்கள் அனைத்தும் உட்பொதிவாய் அமைந்த சன்மார்க்கத்தின் சகல துறைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு என்பது இதன் பொருளாகும். இதனை ஸஹீஹூல் பபுகாரீ (இமாம் புகாரீ அவர்களின் ஆதாரப்பூர்வ நபிமொழித் தொகுப்பு) என்று சுருக்கமாகக்கூறுவர்.16 ஆண்டுக் காலக் கடின உழைப்புக்குப் பின் இத்தொகுப்பு உருவானது.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இந்நூலன்றி வேறு பல நூல்களும் எழுதியயுள்ளார்கள். அவற்றில் சில 1.அல் அதபபுல் முஃப்ரத் 2.அத்தாரீகுல் கபீர் 3.அத்தாரீஸ் ஸஃகீர் 4.அல் முஸ்னதுல் கபீர் 5.அத்தஃப்சீரல் கபீர் 6.அல் மப்சத் 7.அல்ஹிபா 8.அல் அஹரிபா 9.அல்வஹ்தான் 10.அல் இலல்.

கல்விக் கடலாகத் திகழ்ந்த இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இறைவழிபாடு. நபிவழி வாழ்க்கை.நல்லொழுக்கம் ஆகியவற்றுடன் தூய்மையான முறையில் வாழ்ந்தார்கள். வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுவிட்ட அன்னார் ஹிஜ்ரி 256 (கி.பி. 870) ஹவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து (கர்க்க்நத் ரஹயா) நகரில் தமது 62ஆவது வயதில் மறைந்தார்கள்.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்