Saturday, November 7, 2009

குர்பானி

- (குர்பானி சம்மந்தப்பட்ட பதில்கள் யாவும் "மனாருல் ஹ{தா" மாத இதழில் மௌலவி, முஹம்மது பாருக் காஷிஃபி அவர்கள் அளித்தவையாகும்.)

66. கேள்வி: ஹஜ்ஜுப் பெருநாளில் செய்ய வேண்டிய சிறந்த அமல் எது?

பதில்: குர்பானி கொடுப்பதாகும். "துல்ஹஜ் பிறை பத்தில் மனிதன் செய்யும் குர்பானியைவிட வேறு எந்த செயலும் (அமலும்) அல்லாஹ்விடம் மிக விருப்பமுள்ளதாக இருக்க முடியாது. குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு தனது கொம்புடனும், குளம்புடனும், முடியுடனும் கியாமத் நாளில் வரும். அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்டுவிடுகிறது. எனவே, (அல்லாஹ்வின் அடியார்களே!) பரிபூரணமான மனமகிழ்வுடன் குர்பானியை நிறைவேற்றுங்கள்" என்று பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

- அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹ{ அன்ஹா, நூல்: திர்மிதீ, இப்னு மாஜா

67. கேள்வி: குர்பானி யார் யார் கொடுக்க வேண்டும்?

பதில்: பருவமடைந்த, அறிவுத் தெளிவான, வசதி பெற்ற முகீமான ஒவ்வொரு முஸ்லிமும் கொடுப்பது வாஜிபாகும். (ஷாஃபிஈ மதஹபில், "சுன்னத் முஅக்கதா" வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.

68. கேள்வி: வசதி பெறுதல் என்றால் என்ன?

பதில்: ஜகாத் கொடுக்குமளவுக்கு வசதி பெற்றிருக்க வேண்டும். (ஷாஃபிஈ மதஹபின்படி துல்ஹஜ் 10 முதல் 13 வரை உள்ள நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய செலவுகள் போக குர்பானி பிராணி வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்மீது குர்பானி கொடுப்பது சுன்னத் முஅக்கதாவாகும்.


69. கேள்வி: ஜகாத்தைப் போன்றே அப்பொருளின் மீது ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டுமா?

பதில்: இல்லை. ஜகாத்திற்கும், குர்பானிக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.

ஜகாத்:

1. தங்கம், வெள்ளி, வியாபாரப் பொருட்கள், பணம் போன்றவற்றில் மட்டுமே நிஸாபை கணக்கிடப்படும்.
2. நிஸாபை அடைந்து அதன் மீது ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

குர்பானி:

1. இந்த (தங்கம், வெள்ளீ, பணம், வியாபாரப் பொருட்கள்) நான்கு

பொருட்கள் மூலம் நிஸாபை அடைந்தாலும் கடமையாகும். அதுமட்டுமின்ற
அத்தியாவசியத் தேவைபோக மீதமுள்ள நான்கல்லாத பொருட்களினபெறுமானத்தின்

மூலம் நிஸாபை அடைந்தாலும் குர்பானி கடமையாகும். 3. வருடம் பூர்த்தியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்னும் சொல்லப
போனால், குர்பானியின் நாளான 10 முதல் 12 வரை உள்ள மூன்று நாட்களில்,

மூன்றாவது நாளின் மாலைக்குள் ஒருவருக்கு இந்த நிஸாபுடைய அளவுக்கு

பொருள் ஏதாவது ஒரு வழியில் கிடைத்துவிட்டாலும் அன்றைய தினம் குர்பான கொடுப்பது அவர் மீது வாஜிபாகும்.


70. கேள்வி: குர்பானி கொடுப்பதற்குள்ள நாட்கள் எவை?

பதில்: பிறை 10 முதல் 12 வரையுள்ள மூன்று நாட்களாகும். (ஷாஃபிஈ மதஹபின் முறைப்படி 13 வரையுள்ள நான்கு நாட்களாகும்)


71. கேள்வி: குர்பானியின் ஆரம்ப நேரம் எப்போது?

பதில்: ஈதுத் தொழுகை நடத்த ஷரீஅத்தில் அனுமதியில்லாத அளவு குக்கிராமமாக இருந்தால், துல்ஹஜ் பிறை 10 ஆம் நாள் சுப்ஹ{ ஏற்பட்டதிலிருந்து குர்பானி நேரம் ஆரம்பமாகும். நகரவாசிகள் பெருநாள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுப்பது கூடாது. தொழுகைக்குப் பின்னரே கொடுக்க வேண்டும். அவ்வூரில் ஏதேனும் ஓர் இடத்தில் தொழுகை நடைபெற்றிருந்தாலும் போதும்.


72. கேள்வி: நகரவாசிகள் ஈதுத் தொழுகைக்கு முன்னரே குர்பானியை அறுத்து விட்டால் என்ன செய்ய வேண்டும?

பதில்: மீண்டும் ஒரு பிராணியை தொழுகைக்குப் பின்னர் குர்பானி கொடுக்க வேண்டும்.


73. கேள்வி: குர்பானியுடைய நாட்களில் குர்பானி கொடுப்பதற்கு பதிலாக அதற்குரிய பணத்தில் வேறு வகையான தானதர்மங்கள் செய்தால் அது குர்பானியின் கடமைக்கு ஈடாகுமா?

பதில்: ஈடாகாது. இது அறவே கூடாது. அப்படி செய்தால் அவர் குர்பானி கொடுக்காத குற்றத்திற்கு ஆளாவார்.


74. கேள்வி: குர்பானிக்காக அறுக்க அனுமதிக்கப்பட்டுள்ள பிராணிகள் எவை?

பதில்: ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று மட்டும்தான். இவற்றில் அனைத்து வகையும் (செம்மறி, வெள்ளாடு, பசு, எருது, எருமை) கூடும்.


75. கேள்வி: குர்பானியை எந்தெந்த முறையில் நிறைவேற்றலாம்?

பதில்: குர்பானியை தனித்தனியாகவும், கூட்டாகவும் இரு முறைகளில் நிறைவேற்றலாம்.


76. கேள்வி: கூட்டு சேர்பவர்கள் அனைவரும் குர்பானியின் நிய்யத் வைத்திருக்க வேண்டுமா?

பதில்: அவசியமில்லை. ஆனால், அனைவரின் நிய்யத்தும் வணக்கமாக (இபாதத்தாக) இருக்க வேண்டும். யாரேனும் ஒருவர் இபாதத்தை நாடாமல் வெறும் இறைச்சிக்காக மட்டும் பங்கு சேர்கிறாரோ அவரது குர்பானி நிறைவேறாது. (ஷாஃபிஈ மதஹபின்படி யார் எப்படி நிய்யத் வைத்தாலும் குர்பானி கூடிவிடும்)


77. கேள்வி: கடமையில்லாதோர் குர்பானி கொடுக்கலாமா? அதற்காக கடன் வாங்கலாமா?

பதில்: கொடுக்கலாம். நன்மை கிடைக்கும். ஆனால், கடனைத் திருப்பி செலுத்த சிரமமான நபர் கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சிறந்ததல்ல. இருப்பினும் அப்படி செய்தால் கூடிவிடும்.


78. கேள்வி: கடமையல்லாத நபர் குர்பானிக்காக பிராணி வாங்கி விட்டால் அதன் சட்டம் என்ன?

பதில்: கடமையல்லாத நபர் குர்பானி கொடுப்பதற்காக பிராணியை வாங்கி விட்டால், அவர் அந்த பிராணியை குர்பானி கொடுப்பது வாஜிபாகிவிடும். ஏனெனில், அப்பிராணி நேர்ச்சை செய்யப்பட்டதன் சட்டத்ததிற்கு வந்துவிடும்.


79. கேள்வி: குர்பானி தோலின் சட்டம் என்ன?

பதில்: குர்பானி தோலை பதனிட்டு தானே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். அல்லது ஏழைகளுக்கு சதகாவாக கொடுக்கலாம். விற்பது கூடாது. அப்படி விற்பனை செய்து விட்டால் அக்கிரயத்தை ஏழைகளுக்கு சதகா செய்துவிடுவது கடமையாகும்.


80. கேள்வி: தோலை யாருக்கு கொடுப்பது கூடாது?

பதில்: 1. மஸ்ஜித் கட்டடப் பணி, மராமத்து பணிகளுக்காகவும், 2. அறுத்து உறிப்பவர், உதவியாளர் ஆகியோருக்கு ஊதியமாகவும், 3. முஅத்தின், இமாம் ஆகியோருக்கு சம்பளமாகவும் கொடுப்பது கூடாது.


81. கேள்வி: தோலை மதரஸாக்களுக்கு கொடுக்கலாமா?

பதில்: மதரஸாவின் கட்டுமானப்பணி, மராமத்துப்பணிக்கோ கொடுக்காமல் அங்கு பயிலும் மாணவர்களுக்காக கொடுக்கலாம்.


82. கேள்வி: முஸ்லிம் அறுக்கும்போது மாற்று மதத்தவர் பிராணியை பிடித்திருந்தால் கூடுமா?

பதில்: கூடும். ஹலாலாகும். ஏனெனில், பிராணியை பிடித்திருப்பவர் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும் என்பதில்லை. மேலும், பிடித்திருக்கும் மாற்று மதத்தவர் பிஸ்மில்லாஹ் சொன்னாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

குறிப்பு: மேற்சொன்ன சட்டம் பிராணியை பிடித்தல் என்ற உதவியை மட்டும் செய்தால்தான். ஆனால், அறுப்பவர் அறுக்கும்போது கத்தியை வேகமாக செலுத்த அல்லது அறுப்பவரின் கைக்கு வலு சேர்க்க என்பது போன்ற உதவிகளை செய்தால் அப்போது உதவி செய்பவர் பிஸ்மில்லாஹ் சொல்வது அவசியமாகும். எனவே, அவ்வுதவியாளர் முஸ்லிமாக இருப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் அறுத்ததை சாப்பிடுவது ஹராமாகும்.


83. கேள்வி: பெண்கள் அறுத்ததை சாப்பிடலாமா?

பதில்: சாப்பிடலாம். அது ஹலாலானதே.


84. கேள்வி: இரண்டு பேர், தவறுதலாக ஒருவர் மற்றவரின் பிராணியை தன்னுடையது என எண்ணி அறுத்துவிட்டால் என்ன சட்டம்?

பதில்: இருவரின் குர்பானியும் றிறைவேறிவிடும். மேலும் யார் மீதும் தண்டம் இல்லை.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்