Monday, September 14, 2009

இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை

இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை

எவ்வித முன்மாதிரியுமின்றி எல்லாவற்றையும் படைத்து ஆட்சி புரியும் அல்லாஹ்விற்கே எல்லா புகழும். ஸலவாத்தும் ஸலாமும் சங்கை நபி நாதருக்கும்இ சஹாபா தோழர்களுக்கும் ஆன்றோர் யாவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராகிறான். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதல்ல. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. வரம்புகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர். வரம்பு மீறாதீர் என இறைவன் எச்சரித்துள்ளான். அவற்றை உணர்ந்துக் கொண்டே மனித இனம் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான் இறைவன்.

சமீப காலங்களில் அடிக்கடி நிலநடுக்கங்கள்இ பூகம்பங்கள்இசுனாமி பேரலைகள்இ புயல் சீற்றங்கள்இ கடல் கொந்தளிப்புகள் என இயற்கை பேரழிவுகள் குறித்த செய்திகளை கண்டும்இ கேட்டும் பல நாடுகளிலும் மனித இனம் கலங்கிபோயிருப்பதை காண்கின்றோம்.

மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆற்றல் அபரிவிதமானது. ஆனால் மனிதனோ தன்னை படைத்த அல்லாஹ்வையே மறந்து அவன் விதித்த மனித வாழ்வின் நெறிமுறைகளை விதிமுறைகளை மீறி நடக்கும் போது தன்னை தன் ஆற்றலை தன் சிந்தனையை மனிதனுக்கு உணர்த்திட இயற்கை பேரழிவுகளை எச்சரிக்கையாகவும் படிப்பினைப் பெற்று பக்குவம் பெறுவதற்காகவும் ஏற்படுத்துகிறான். ஆயினும் மனித சமுதாயம் படிப்பினை பெற மறுக்கிறது. அல்லாஹ் திருமறையில் குர்ஆனில் கூறுகிறான்.

واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان يأتيكم العذاب بغتة وانتم لا تشعرون 39:55

நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள்.
மனிதன் எதை பற்றியும் சிந்திக்காமல் பிறர் நலன் மீறிஇ சுய நலமொன்றே தமது குறிக்கோளாகவும் அல்லாஹ்வையும் மறுமையையும் மறந்து சுகபோகம் ஒன்றே தன் வாழ்வின் இலட்சியமாகவும் கருதி வாழ முற்பட்டதின் விளைவு தானே ஓசோன் படலத்தில் ஓட்டை எனும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு.

இந்த உலகில் எத்தனையோ சமுதாயத்தவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்தந்த சமுதாயத்தவர் அல்லாஹ்வை மறுத்து அவன் விதித்த வரம்புகளை மீறி நடந்த போது அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இயற்கை பேரழிவுகளை ஓர் இறை எச்சரிக்கையாகவே திருமறையில் விவரிக்கிறான்.
நூஹ் (அலை) அவர்களுடைய கவ்முகள்இ இறைவனைஇ இறைக் கட்டளைகளை ஏற்க மறுத்து வாழ்வில் அநியாய அக்கிரமங்கள் செய்த போது தன் நபியையும் வழிபட்டவர்களையும் பாதுகாத்து வரம்பு மீறியோரை வெள்ளப் பிரளயத்தால் அழித்தொழித்ததை எடுத்தியம்பி மனித இனத்தவருக்கு எச்சரிக்கை விடுக்கிறான்.

ஆது சமுதாயத்தவருக்கு ஹூது (அலை) நபியாக அனுப்பப்பட்டார்கள். எமனில் ஹழர மௌத் பிரதேசத்தில் முஹ்றா எனும் கிராமத்தில் அஹ்காஃப் என்னும் ஓர் ஓடைப் பகுதி. அதில் பெரும்பாலும் மணல்மேடு. அந்த பகுதியில் தான் ஆதுக் கூட்டத்தார்கள் வசித்தார்கள். அவர்கள் பலசாலிகளாகவும் இருந்தார்கள். சுய பலத்தில் மதிமயங்கி அநியாய அக்கிரம அனாச்சாரங்கள் செய்து வந்தார்கள். அவர்கள் பெரும் செல்வம் படைத்தவர்களாயும் இருந்தார்கள். எனவே செருக்கு அதிகமாகி இறையோனை நிராகரித்து வரம்புகள் மீறி அக்கிரமங்களில் ஈடுபட்டார்கள். ஹூது (அலை) அவர்களை ஏளனப்படுத்தி எப்போது வரும் நீர் கூறும் இறைவேதனை என வினவினார்கள்.

வேதனையும் வந்தது என்ன நிகழ்ந்தது என்பதை ஓர் இறை எச்சரிக்கையாகவே குர்ஆன் கூறுகிறது.

فلما رأوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم تدمر كل شيئ بامر ربها فاصبحوا لا يرى الا مسكنهم كذلك نجزى القوم المجرمين 46:24.25

ஆகவே (தண்டனையாகிய) அதனை தங்களது பள்ளத்தாக்குகளை முன்னோக்கிவரும் மேகக் (கூட்டமாக) கண்ட போது இது நமக்கு மழையை பொழிய வைக்கும் மேகமாகும்இ என்று அவர்கள் கூறிக் கொண்டனர். அல்ல. எதனை நீங்கள் விரைவாக தேடினீர்களோ அந்த ஒன்றாகும். (அது) ஒரு புயற்காற்றுஇஅதில் நோவினை தரும் வேதனை இருக்கிறது (என்று கூறப்பட்டது).

அப்புயலானது தனது ரப்பின் கட்டளைப்படி எல்லா பொருட்களையும் அழித்து நாசமாக்கிவிடும் (என்றும் கூறப்பட்டது) பின்னர் அவர்களுடைய இல்லங்களைத் தவிர (வேரொன்றும்) காணப்படாதவாறு காலையில் அவர்கள் (அழிவிற்குள்) ஆகிவிட்டனர். இவ்வாறே குற்றவாளிகளான கூட்டத்தாருக்கு நாம் கூலி கொடுப்போம். 46:24இ25.

காற்று எனும் இயற்கை வளம் மனிதன் உயிர் வாழ இன்றியமையாத ஓர் இறை அருட்கொடையாகும். ஆயினும் மனிதன் இறை வரம்பு மீறும் போது இறை சோதனையாக மாறி இயற்கை சீற்றமாக புயல் காற்றாக உருவெடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகளும்இ பேரிழப்புகளும் கொடூரமான இறை வேதனையாக மாறிவிடுகிறது.

عن ابي هريرة رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الريح من روح الله تأتي بالرحمة وتأتي بالعذاب فاذا رأيتموها فلا تسبوها واسألواالله خيرها واستعيذوا بالله من شرها (رواه ابو داود باسناد حسن)

ஆபூஹூறைறா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூலுல்லாஹி ச வர்கள் சொல்ல நான் செவிமடுத்தேன். காற்று அல்லாஹ்வின் கிருபையாகும். அது அல்லாஹ்வின் அருட்கொடையை கொண்டு வருகிறது. சிலவேளை அது அவனின் வேதனையையும் கொண்டு வருகிறது. ஆகவே நீங்கள் அதனைக் கண்டால் அதனை திட்ட வேண்டாம். அதில் நலவானதை அல்லாஹ்விடம் கேளுங்கள். அதில் தீங்கானதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். (அபூ தாவூது)

இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை நாம் புரிந்து செயல் பட வேண்டும் என்பதற்காக குர்ஆன் தமூது கூட்டத்தாரை ஓர் படிப்பினையாக சுட்டிக்காட்டுகிறது. தமூது கூட்டத்தினருக்கு நபி சாலிஹ் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். அக்கூட்டத்தினர் பாறைகளை குடைந்து வாழும் பலசாலிகளாக இருந்தனர். அல்லாஹ்வை ஏற்க மறுத்து நபியின் அறிவுறுத்தலை மீறி வரம்பு மீறி செயல்பட்டு அநியாய அக்கிரமங்களில் ஈடுபட்ட போது அம்மக்களுக்கு இயற்கை பேரழிவாக இடிமுழக்கம் அல்லவா அவர்களை இல்லாமல் ஆக்கியது.

فلما جاء امرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن حزي يومئذ ان ربك هو القوي العزيز واخذا الذين ظلموا الصيحة فاصبحوا فى ديارهم جثمين

எனவே நம்முடைய தண்டனையான கட்டளை வந்தபோது சாலிஹையும் அவருடன் ஈமான் கொண்டோரையும் நம்முடைய கிருபையைக் கொண்டும் அந்நாளின் இழிவிலிருந்தும் நாம் காப்பாற்றினோம். நிச்சயமாக உமது ரப்பு அவன் ஆற்றல் மிக்கவன். (யாவற்றையும்) மிகைத்தவன்.

இன்னும் அநியாயம் செய்துக் கொண்டிருந்தோரை பேரிடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்களது வீடுகளிலேயே முகம் குப்புற விழுந்து (இறந்து) காலையில் கிடந்தார்கள். 11:66இ67.

இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை மனித சமுதாயம் புரிந்துக் கொள்ள வேண்டும். நபி லூத் (அலை) அவர்களது கவ்முகள் இறைவன் விதித்த இறைவரம்புகளை மீறி தகாத வாழ்வு வாழ்ந்த போது நபியையும் அவர்களுக்கு வழிபட்டவர்களையும் பாதுகாத்து மாறு செய்தவர்களை இயற்கை பேரழிவு மூலம் அழித்தொழித்ததை ஏனையோருக்கு படிப்பினையாக திருமறை எடுத்தியம்புகிறது.

فلما جاء امرنا جعلنا عاليها سافلها وامطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد

எனவே நம்முடைய (தண்டனையாகிய) கட்டளை வந்த போது நாம் (அவர்களின் ஊராகிய) அதன் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியாக்கி விட்டோம். மேலும்இ அதன் மீது சுடப்பட்ட கற்களை தொடர் மலையாக பொழியச் செய்தோம். அக்கற்கள் உம்முடைய ரப்பிடமிருந்து அடையாளமிடப்பட்டதாக இருந்தது. அ(வ்வூரான)து அநியாயக் காரர்களுக்கு மிக தொலைவிலும் இல்லை. 11:82இ83.

இது போன்றே மத்யன் வாசிகளுக்கு சுஐபு (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு அச்சமுதாயத்தவர்களில் இறைவரம்பு மீறி நடந்த போது அநியாயம் அக்கிரமங்கள் செய்துக் கொண்டிருந்தவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது என்பதையும் குர்ஆன் விவரிக்கிறது.

அவ்வாறே ஃபிர்அவ்னும் அவன் கூட்டத்தாரும் பனீ இஸ்ரவேலர்களில் சனிக் கிழமைகளில் வரம்பு மீறியோருக்கும் வேதனை இறக்கப்பட்டதையும் திருமறை படம்பிடித்து காட்டி இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை இச்சமுதாய மக்களுக்கு எடுத்தியம்புகிறது.

இவற்றையெல்லாம் அறிந்துக் கொண்டே இறைவனின் வல்லமையை புரிந்துக் கொண்டே மனித இனம் மாறுபட்டு நடக்கும் போது இயற்கை பேரழிவுகள் மூலம் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை செய்து பாடம் புகட்டுகிறான் அல்லாஹ். திருமறைக் குர்ஆன் விவரிக்கும் ஒரு செய்தி وكذلك اخذ ربك اذا اخد القرى وهي ظالمة ان اخذه اليم شديد

சில ஊர்கள் அவை அநியாயம் செய்துக் கொண்டிருந்த நிலையில் (வேதனையைக் கொண்டு) அவன் பிடித்தான். உம்முடைய ரப்பின் பிடி இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி நோவினை அளிக்கக் கூடியது. மிகக் கடினமானது. 11:102.

திருமறைக் குர்ஆன் விவரிக்கின்ற இது போன்ற செய்திகள் வாழும் மனித இனத்துக்கு படிப்பினையாகவும்இ எச்சரிக்கையாகவும் அமைகிறது. எனினும் மனித இனம் படிப்பினை பெறாது முழுக்க முழுக்க மாறு செய்யும் போது பேரழிவுகள் மூலம் இறைவன் பாடம் புகட்டுகிறான்.

அதன் விளைவாக தற்காலத்தில் காட்டரினா புயல் முதல் மாலா புயல் வரையும் கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் துவங்கிய கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக ஜப்பான் இந்தியா இலங்கை என்று ஒரே நேரத்தில் பல நாடுகளையும் நடுநடுங்கச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதையும் மனித இதயங்கள் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியுமா?அ ந்நாளை.

2001 ஜனவரி 26ம் நாள் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு இருபதாயிரம் மனித உயிர்கள் பலியாயிற்றே. இவைகள் மனித நெஞ்சத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தியது இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை தான் என்பதை மனித இதயங்கள் ஏற்று சீர் பெற்றது. இதற்கெல்லாம் என்ன காரணம் இறைவன் குர்ஆனில் கூறுவது கவனிக்க தக்கது.

ما اصابك من حسنة فمن الله وما اصابك من سيئة فمن نفسك

(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். 4:79.

மனிதன் அவன் வாழ்வில் இறை விசுவாசியாகி இறை நெருக்கத்தை பெற வேண்டுமானால் இரு விஷயங்களில் அனுதினமும் நடை போட வேண்டும்.

1. இறைவனை எப்போதும் நினைத்து வணங்கி அவன் விதித்த வரம்புகளை மீறாது நடக்க வேண்டும்.

2. இறைக்கடமை செய்வதுடன் படைப்பினங்களுக்கு நன்மை செய்து வாழ வேண்டும்.

தற்காலத்தில் முந்திய சமுதாயத்தவர்களில் பேரழிவுகளுக்கு ஆளான சமுதாயத்தினரை போன்று பிறர் நலம் கருதாது சுய நலம் கருதி பூமியில் குழப்பம் விளைவித்து இறைவரம்பு மீறி வாழ்வதில் மனித சமுதாயம் ஆனந்தம் அடைகிறது. அதுவே பூமியில் பேரழிவுகளுக்கு காரணமாக ஆகிவிடுகிறது.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்இ தினை விதைத்தவன் தினை அறுப்பான். எனினும் இது போன்ற இயற்கை பேரழிவுகள் மூலம் பாதிக்கப்படும் அனைவரும் வரம்பு மீறியவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்தவர்கள் எனும் முடிவிற்கும் நாம் சென்று விடக் கூடாது. காரணம் நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்பதை போன்று தீயோருக்கான வேதனைகள் நல்லோர்களையும் வந்தடையும் என்பதனையும் புரிய வேண்டும்.

وعن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اذا انزل الله تعالى بقوم عذابا اصاب العذاب من كان فيهم ثم بعثوا على اعمالهم _متفق عليه

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூலுல்லாஹி ச அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் ஒரு கூட்டத்தார் மீது அதாபை (வேதனையை) இறக்கி வைத்தால் அவ்வேதனை அக்கூட்டத்திலுள்ள நல்லோர் உட்பட அனைவரையும் பிடித்துக் கொள்ளும். ஆனால் அவர்கள் பின்னர் கியாமத் நாளில் எழுப்பப்படும் போது அவரவர்களின் அமல்களுக்கேற்ப எழுப்பப்படுவர். (நல்லோர்கள் நல்ல அந்தஸ்துடனும்இ தீயோர் தீய நிலையிலும் எழுப்பப்படுவர்.) புகாரிஇ முஸ்லிம்.

இயற்கை பேரழிவுகள் இயற்கை சீற்றங்கள் பேரிழப்புகள் நிலநடுக்கங்கள்இ பூகம்பங்கள்இ சுனாமி ஆழி பேரலைகள் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் பலவிதமாக கூறினாலும் இஸ்லாமிய பார்வையில் மனிதர்களிடம் இறைவனை மறந்து பல்வேறு அடாத செயல்கள் தோன்றி விட்டால் பூமி தாங்காது. பேரழிவை ஏற்படுத்தும்இ சோதனைகள் தொடரும் என்பதை நபி மொழிக் கருத்து நமக்கு விளக்கம் தருகிறது.

1. பொது சேவையில் ஈடுபடுவோர் பொதுச் சொத்தை தங்களின் சொந்த சொத்தாக கருதி தம் மனம் போல் செயல்படுவது.

2. பிறர் கொடுத்து வைத்த அமானிதத்தை தான் பெற்ற இலாபமாக கருதி அதை பயன்படுத்துவது.

3. ஜகாத்தை கொடுக்காமல் இருப்பது.

4. அறிவும்இ நன்னடத்தை பெறுவதையும் நோக்கமாக கொள்ளாமல் (பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு) கல்வி பயிற்றுவிக்கப்படுவது.

5. தாயை துன்புறுத்துவது.

6. ஒருவன் தன் மனைவிக்கு முழுமையாக கட்டுப்படுவது.

7. தந்தையை வெறுப்பது.

8. பள்ளிவாசல்களில் கூச்சல்இ குழப்பங்கள் அதிகரிப்பது.

9. குற்றவாளிகளே நாட்டின் தலைவர்களாக உயர்வு பெறுவது.

10. தரம் கெட்டவர்களே சமூகத்தை வழி நடத்தி செல்வது.

11. நாட்டியமாடும் பெண்களும்இ வீண் பொழுது போக்கு விஷயங்களும் அதிகரித்து விடுவது.

12. சமுதாயத்தின் கடைக் கோடி மக்கள் சமுதாயத்தின் மூத்த குடிமக்களை குறை பேசி திரிவது.

13. மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படுவது. இது போன்ற சமுதாய சீர் கேடான செயல்கள் மலிந்து விட்டால் நெருப்புக் காற்றையும்இ நிலச் சரிவுகளையும்இ பூகம்பங்களையும்இ ஆழி பேரலைகளையும் உருமாற்றம் செய்யப்படுவதையும்இகல் மழை பொழிவதையும் எதிர் பாருங்கள்.

நூல் அறுந்து விட்ட முத்து மாலையில் முத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக விழுவதை போன்று ஆபத்துக்கள் தொடர்ந்து வெளியாகும் என்பது நபி அவர்களின் அமுத மொழிக் கருத்தாக விளங்க முடியும்.

எனவே இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை உணர்ந்து மனித இனம் மனித பண்புகளை மனித நேயத்தை பிறர் நலனை பாதுகாத்து நல்லொழுக்க நெறி பேணி மன்னவனாம் அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறாமல் நேர்மையுடன் வாழ வழிவகை காண வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் பூமியில் சாந்தத்தையும்இ மனித வாழ்வில் சந்தோஷத்தையும்இ நிம்மதியையும் இம்மையிலும்இ மறுமையிலும் நற்பேற்றினை நம்மவர்களுக்கு வழங்கி அருள் புரிவானாக!

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்