Monday, August 24, 2009

நோன்பின் சிறப்புக்கள்

முதல் சிறப்பு: நோன்பாளியின் வாயிலிருந்து எழும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும். நோன்பின் பொழுது சிறுகுடல் இரப்பை உணவின்றிக் காலியாகக் கிடக்கும் பொழுது, வாயில் எழும் இயல்பான வாடை, மனிதர்களிடத்தில் மிகவும் வெறுப்புக்குரிய ஒன்று. ஆனால் இறைவனிடத்திலோ இது கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும்.

இரண்டாவது சிறப்பு : மலக்குகள் நோன்பாளிகளுக்காக - நோன்பு திறக்கும் வரை பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத, இணை வைக்காதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். அவர்கள் பிரார்த்தனை செய்தவதன் நோக்கம் அல்லாஹ் அவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதும், அதன் மூலம் நோன்பாளிகளின் அந்தஸ்த்தைப் பிரகடனப்படுத்துவதும், அவர்களின் புகழை உயர்த்துவதும் அவர்கள் நோற்ற நோன்பின் சிறப்பை விளக்குவதுமாகும்.

மூன்றாவது சிறப்பு : அல்லாஹ் ஒவ்வொரு நாளும் சுவனத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றான். மேலும், கூறுகின்றான் : (சுவனமே) என் நல்லடியார்கள் கஷ்டத்தையும் சிரமத்தையும், பொருட்படுத்தாமல் உன் பக்கம் வருவதற்கு மிகவும் நெருங்கி விட்டார்கள். ஒவ்வொரு நாளும் அல்லாஹ் தனது சுவனத்தை அலங்கரிப்பதன் நோக்கம், அவனுடைய நல்லடியார்களை உற்சாகப்படத்துவதும் சுவனம் புகவதில் அவர்களுக்கு ஆர்வமூட்டுவதுமாகும்.

நான்காவது சிறப்பு : மூர்க்கத்தனமான ஷைத்தான்கள் சங்கிலிகளாலும், விலங்குகளாலும் பிணைக்கப்படுகிறார்கள். ஆதலால், அவர்களது விருப்பப்படி நல்லடியார்களைச் சத்தியத்திலிருந்து வழிகெடுக்கவோ அல்லது நல்லனவற்றைச் செய்ய விடாமல் அவர்களைத் தாமதப்படுத்தவோ முடியாது. இது நல்லடியார்களுக்கு அல்லாஹ் செய்யும் உதவியாகும். அவர்களின் விரோதியை விட்டும் அவர்களைத் தடுத்தும் விட்டான். அந்த விரோதி எப்படிப்பட்டவன் எனில், தன்னைப் பின்பற்று பவர்களை நரகத்தில் கொண்டு செல்லக் சேர்க்க் கூடியவன். இந்த நல்லுதவியால் தான் நல்லோர்கள் ஏனைய நாட்களை விட அதிகமாக இம்மாதத்தில் நல்லமல்கள் செய்வதிலும், தீமைகளை விட்டு விலகுவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதை நீங்கள் காண்கிறீர்கள்.

ஐந்தாவது சிறப்பு : இம்மாதத்தின் கடைசி இரவில் முஹம்மத் நபி (ஸல்)வர்களின் சமுதாயத்தினருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குகின்றான். இது நோன்பையும், தொழுகைகளையும் அவர்கள் முறையாக நிறை வேற்றியிருக்கும் பட்சத்தில் தான்! அமல் செய்து முடித்தவுடன் அதற்கான கூலியை இந்தச் சமுதாயத்தி னருக்கு அல்லாஹ் முழுமையாக வழங்குவதென்பது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்