Tuesday, August 25, 2009

நோன்பு அல்லாஹ்வுக்குரிய வழிபாடு

ஒரு முஸ்லிம் மீது கட்டாயக் கடமையாக இறைவன் ஆக்கியிருக்கும் கடமைகளில் இந்த நோன்பும் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தக் கட்டாயக் கடமைகளில் ஒன்றான நோன்பு, அதற்குரிய மாதத்தில் நோற்கும் பொழுது, மனிதன் தன்னுடைய இறைவனின் பக்கம் நெருங்கிச் செல்கிறான். அதுமட்டுமல்ல இறைவன் கட்டளையிட்டு விட்டான் என்பதற்காக அந்த ரமளான் மாத்தில் தனக்கு மிகவும் விருப்பமானவற்றில் இருந்தும் அவன் ஒதுங்கி, உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் - இவை எல்லாம் கடந்த மாதங்களில் தான் விரும்பும் பொழுதெல்லாம் ஆசை தீர அனுபவித்தவன், இன்று தன் இறைவனுக்காக அவற்றில் இருந்து தவிர்ந்து இருக்கின்றான். இதன் மூலம் அவனுக்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கம் அதிகமாகின்றது. மேலும், அவனது ஈமான் - இறைநம்பிக்கை பலப்படுவதுடன், அல்லாஹ்வுக்கு அவன் அடிமைப்பட்டிருப்பதையும், அல்லாஹ்வின் மீது அவன் கொண்டுள்ள அன்பின் வலிமையையும், மறுமையில் இறைவன் தனக்கு வாக்களித்துள்ள சுவனத்தின் மீது அவன் ஆதரவு வைத்திருப்பதையும் காட்டுகின்றது.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்