Monday, May 6, 2013

ulamaa cuddalore jamath pno portonovo tamil islam muslim india aalim

Sunday, May 23, 2010

இஸ்லாமிய பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள்

இன்றைக்கு இஸ்லாம் என்பது ஒரு மதமாக உலக மக்களிடையே முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் எந்த மதத்திற்கும், இயக்கத்திற்கும், அமைப்பிற்கும் இல்லாதொரு பண்பாட்டுக் கொள்கை இஸ்லாத்திடம் இருக்கின்றது. அத்தகைய பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் தான் பிற மதத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்த வேறுபாடு ஒன்றே இன்றைக்கு இஸ்லாத்துடன் மற்ற கொள்கை மக்களைப் பிணைக்கின்ற காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது.

குர்ஆனை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிக்தால் அவர்கள் இஸ்லாத்தினால் கவரப்பட்டதும், பிரிட்டனின் முதல் தர பாடகராக விளங்கிய கேட் ஸ்டீவன்ஸ் என்பவர் இஸ்லாத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டு யூசுப் இஸ்லாம் என்று மாற்ற வைத்ததும் இந்த இஸ்லாமியப் பண்பாடு தான்.

எனவே, மற்ற மதங்களைப் போல இஸ்லாம் சடங்கு ரீதியான பூஜை, புனஸ்காரங்கள், தீபாராதனைகள், வணக்க வழிபாடுகள் போன்றவற்றை நிறைவேற்றி விட்டால் மட்டும் போதுமென்று சொல்லும் மார்க்கமல்ல, மாறாக, மனிதர்களிடையே பூரணமான ஒழுக்க விழுமங்களை ஏற்படுத்தவே இஸ்லாம் விரும்புகின்றது.

இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், மனிதர்களிடையே ஒழுக்கத்தைப் பூரணப்படுத்தவே நான் வந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

அந்த ஒழுக்க விழுமங்களைப் பாழக்கடிக்கச் செய்யும் அத்தனை வழிகளையும் இஸ்லாம் வேரோடு வெட்டிச் சாய்த்து வைத்திருக்கின்றது. அதன் ஆணி வேரை இனங்கண்டு, அதனால் ஏற்படும் தீமைகளையும் இஸ்லாம் மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

தொழுகை என்பது நேரங் குறித்த கடமையாக இருக்கின்றது என்று கூறும் திருமறைக் குர்ஆன், அந்தத் தொழுகை மனிதர்களிடையே எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் அது கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.

திருமறை கூறுகின்றது :

தொழுகை மானக் கேடான, அருவருக்கத்தக்க காரியங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் (அல்குர்ஆன்) என்று கூறுகின்றது.

இன்றைக்கு இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளையும் மக்கள் மத்தியிலே எடுத்துரைத்து, இந்தப் பூமிப் பந்தை ஒரு ஆரோக்கியமானதொரு கொள்கைத் தளமாக, அமைதி மற்றும் சாந்தி தவழும் வாழ்விடமாக மாற்றியமைக்க முயற்சிக்கின்ற வேளையிலே, இஸ்லாத்திற்கு எதிராக சக்திகள் அதாவது பண்பாடு, நாகரீகம், ஒழுக்கம் என்பதே அறியாத அந்த சக்திகள் இஸ்லாத்தின் குரல் வளையை நெறித்து விட முயற்சிக்கின்ற இந்த வேளையில், பிரச்சாரப் பணிகள் கூட நாளை தடுத்து நிறுத்தப்படலாம் என்றிருக்கின்ற இந்த சூழ்நிலையில், மௌலான அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள், இந்த முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கிச் சென்ற அறிவுரையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொடரை நாம் ஆரம்பம் செய்கின்றோம்.

அவர்கள் கூறினார்கள், நாளை இந்த இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அழைப்புப் பணிக்கு தடை போடப்படலாம்..!? அப்படி ஒரு கால கட்டம் வந்தால் இந்த சமூகம் என்ன செய்வதென்று முடங்கிப் போய் நிற்க வேண்டாம்..! உங்களது இஸ்லாமியப் பண்பாட்டின் மூலம், இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற பண்பாட்டு ஒழுக்க மாண்புகளைப் பேணுவதன் மூலம் நீங்கள் பிற மக்களுக்கு அழைப்புப் பணியைச் செய்யுங்கள். நீங்கள் இஸ்லாத்தைப் பரப்பத் தான் முடியாதே ஒழிய, இஸ்லாமிய பண்பாடுகளைப் பின்பற்றுவதற்கு அதனை உங்கள் சொந்த வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு யார் தடை கொண்டு வர முடியும்!? அந்த பண்பாட்டுப் பாசறை மூலம் நீங்கள் பிற மக்களுக்கான சாட்சியங்களாகத் திகழலாம்..! இஸ்லாமிய அடையாளங்களாகப் பரிணமிக்கலாம் என்ற கருத்தைக் கூறினார்கள்.

எனவே, சகோதரர்களே! இஸ்லாமியப் பண்பாட்டுப் பாசறைகளாக நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் மாற்றியமைத்துக் கொள்வதற்கு இந்தத் தொடர் உங்களுக்கு உதவுமானால் அதுவே இந்தத் தொடரின் வெற்றியாகும். இறைவன் நம் அனைவருக்கும் அவனும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த பண்பாட்டின் படி வாழக் கூடிய முஸ்லிம்களாக நம்மை மாற்றிக் கொள்ள உதவி அருள்புரிவானாக! ஆமீன்!!

மர்வான் இப்றாஹீம் அல் கைசி என்பவரது நூலை அடிப்படையாக வைத்து இந்நூல் தயாரிக்கப்படுகின்றது என்பதையும் உங்களுக்கு அறியத் தருகின்றோம். மேலும் ஒவ்வொன்றையும் தனித்தனி கருத்துக்களாக தொகுத்தும், மேலும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களின் ஒளியில் பெறப்பட்ட கருத்துக்களாகவே அவை அமைந்திருக்கின்றன என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.



சமுதாய சக வாழ்வு


--------------------------------------------------------------------------------

சமூக நல்லுறவுகள்



இஸ்லாம் காட்டித் தந்திருக்கின்ற இஸ்லாமிய ஒழக்க மாண்புகளை ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்றும் பொழுது, இந்தப் பூமியானது சமுதாய சக வாழ்வின் வாழ்விடமாக மாற்றம் பெறுகின்றது. இந்த சமுதாய சகவாழ்வுக்கு முதலில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு பிறர் மீதுள்ள கடமைகளை மதித்தல், இரண்டாவதாக, தன்னிடம் நல்லதொரு பண்பாட்டுத் தகமைகளை உருவாக்கிக் கொள்ளுதல் மூன்றாவதாக, ஒரு மனிதனிடம் இருக்கக் கூடாத கெட்ட பழக்கவழக்கங்கள் அனைத்திலிருந்தும் தவிர்ந்து கொள்ளுதல் ஆகிய இந்த மூன்று அடிப்படையான விசயங்களை ஒரு மனிதன் கடைபிடிக்க ஆரம்பிக்கும் பொழுது, இந்தப் பூமி சமுதாய சக வாழ்வுக்கான மாற்றத்தைப் பெற ஆரம்பித்து விடுகின்றது.



பிற மனிதர்கள் மீது செலுத்த வேண்டிய கடமைகள்

பேச்சு என்பது சமுதாய வாழ்வில் முக்கியமானதொரு பங்கையாற்றுகின்றது மட்டுமல்ல பிற மனிதர்களிடத்தில் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அது உதவுகின்றது. இந்த அதி முக்கியமான தொடர்பு சாதனத்தை நாம் எப்படிக் கையாளுகின்றோம், என்ன வகைக்காக அதனைப் பயன்படுத்துகின்றோம் என்று ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து அதனைச் செயல்படுத்துவது அவசியம்.

நேர்மையான நடப்பதன் மூலம் ஒரு மனிதன் பிற மனிதர்களின் பிரியத்திற்குரியவனாக மாறுகின்றான், இந்த நற்பழக்கம் சமுதாய வாழ்வில் ஒருவரை மற்றவருடன் அன்பு கொண்டு பிணைப்பதற்கு உதவுகின்றது. சமுதாயக் கூட்டறைவை வளர்க்கின்றது. இந்தப் பழக்கம் ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்பாகும்.

இரு மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக முகப் பாவனைகளை வெளிப்படுத்துவது. இந்த முகப் பாவனை வெளிப்பாடு ஒருவர் மற்றவரை நல்ல முறையில் புரிந்து கொள்வதற்கும் இன்னும் அதை விட பிற மனிதர்கள் மீதுள்ள கடமைகளை மதித்த பண்பாட்டுக்கும் அது வழியமைக்கும்.

ஒரு முஸ்லிம் இன்னொரு நபருடைய செய்முறைகள் மூலம் அவரைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும். தன்னை எந்தளவு பிறர் மதித்து நடத்தினார்களோ, அதைப் போலவே அவரையும் மதித்து நடப்பது அவசியம். ஒவ்வொரு மனிதரது உள்ளத்தின் ஆழத்தில் என்ன ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை யாரும் அறிய இயலாது – அவர்களை அல்லாஹ் தான் மிக அறிந்தவன். உங்கள் மீது தீமைகளைப் புரிந்து விடுவதற்கு எண்ணங் கொள்ளக் கூடிய ஒருவரை நீங்கள் என்றும் நம்பி விடாதீர்கள், அவர் உங்கள் மீது நல்லபிப்பராயம் கொண்டிருந்தாலும் சரியே! உங்கள் மீது எனக்கு நல்ல நோக்கம் இருக்கின்றது என்று வெளிப்படையாக அவர் அறிவித்தாலும் சரியே! இத்தகைய நபர்களை உங்களது உற்ற நம்பிக்கையாளராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

ஒரு மனிதன் அடுத்த மனிதனிடத்தில் உறவுகளை வளர்த்துக் கொள்வது என்பது, அவனுடன் ஏற்படுகின்ற மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

ஒரு முஸ்லிம் பிற மனிதர்களிடத்தில் வாக்குறுதி வழங்குவதற்கு முன், அதனை நிறைவேற்றுவதற்கு தன்னால் இயலுமா என்பதை உறுதி செய்து கொண்ட பின்பே வாக்குறுதிகளை வழங்க வேண்டும். வாக்குறுதிகளை வழங்கிய பின்பு, அதனை எக்காரணம் கொண்டும் அதனை முறித்து விட முயற்சி செய்யக் கூடாது. வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது என்பதை அறிந்து, அவர் மன்னித்து விட்டாலே ஒழிய வாக்குறுதி கொடுத்தவரின் பிரச்னை முடிவுக்கு வந்து விடாது என்பதும், இது இருவருக்குமிடையே ஒரு கெட்டதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதையும் வாக்குறுதி கொடுக்கக் கூடியவர் உணர்ந்து, வாக்குறுதி கொடுப்பதற்கு முன் இது பற்றி சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.

ஒரு சமயத்தில் பல நபர்களுக்கு வாக்குறுதி வழங்குவது என்பதும் மோசமான நடத்தையாகும். பல நபர்களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயலும் போது, யாராவது ஒருவருடைய வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமலேயே போய் விடச் சந்தர்ப்பமும் இருக்கின்றது என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும்.

பிற மக்களின் மீது தனக்குள்ள கடமைப்பாடுகள் என்ன என்று சிந்திக்கக் கூடிய ஒருவர், முதலில் நோய் வாய்ப்பட்ட சகோதரரை சந்திப்பதையும் இன்னும் இறந்த சகோதரரின் மரண அடக்க நிகழச்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ, அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார் (ஹதீஸ்). தனக்கு நன்மை செய்த மனிதனுக்கு முதலில் நன்றி தெரிவிப்பது என்பது ஒரு மனிதனுக்கு பிற மனிதர்கள் மீதுள்ள கடமைகளில் முக்கியமானதாகும். நன்றி செய்தவருக்கு,

ஜஸக்கல்லாஹு கைரன் (அல்லாஹ் உனக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று கூற வேண்டியது அவசியமாகும்.

தேவையுடையவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினுடைய கடமையாகும். இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காத, தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றை அவர் உதவியாகக் கோரினாலன்றி, இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற வகைகளுக்கு உட்பட்டு நாம் பிற மக்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகும். ஒருவர் தேவையின் நிமித்தம் உதவியைக் கோரிய பின்பும், அந்த உதவியைச் செய்வதற்கு எந்த விதத்திலும் தயங்கி நிற்பது கூடாது.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு அழைப்புக் கொடுக்கும் பொழுது, குறிப்பாக திருமண விருந்து போன்றவற்றிற்கு அழைக்கும் பொழுது, அந்த விருந்தினை ஏற்று செல்ல வேண்டுமே ஒழிய, அந்த அழைப்பை உதாசிணம் செய்து விடக் கூடாது.

இன்னும் குறிப்பாக தன்னுடைய உடையிலிருந்தும், தன் மேனியிலிருந்தும், வாயிலிருந்தும் (சிகிரெட், வெங்காயம், பூண்டு முதலியவற்றிலிருந்து) வெளியாகும் கெட்ட துர்வாடையின் காரணமாக பிற மனிதர்களை சங்கடத்திற்குள்ளாக்குதல் கூடாது.

அடிப்படையாக இருக்க வேண்டிய தனிநபர் குணநலன்கள்

பொதுவாகக் கூற வேண்டுமென்றால் நல்ல குணநலன்களை விட மிகச் சிறந்தது எதுவுமில்லை. மக்களில் சிறந்தவர்கள் யார் என்றால், நல்ல குணநலன்களைக் கொண்டவர்களே, மக்களின் மிகக் கெட்டவர்கள் யார் என்றால், கெட்ட குணநலன்களைக் கொண்டவர்களே! இங்கே நாம் தரக் கூடிய ஒவ்வொரு வழிமுறைகளும் முஸ்லிம்கள் அனைவரும் நன்றாகச் சிந்தித்துக் கடைபிடிக்க வேண்டியதொரு அம்சங்களாகும்.

பிறரிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள், அகம்பாவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை நிறைவேற்றுங்கள்.

எப்பொழுதும் உண்மையே பேசுங்கள், நீங்கள் எதனைப் பேசுகின்றீர்களோ அதன்படியே நடக்கவும் செய்யுங்கள்.

முஸ்லிமாக இருப்பினும் அல்லது முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் சரியே..! பிறரிடம் கருணை காட்டுபவராக இருங்கள்.

தேவையுடயவர்களுக்கு உதவுபவராகவும், சங்கடங்களில் உழல்பவர்களுக்கு உதவிக்கரம் வழங்குபவராகவும், இன்னும் சொல்லப்போனால், அவர் உங்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்காத நிலையிலும் கூட, உதவி தேவைப்படுபவர்களைச் சந்தித்து உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிறர் செய்யும் குற்றங் குறைகளை மன்னிக்கும் நிலையில் அதிகாரம் மற்றும் ஆட்சி கைவரப்பெற்றவராக நீங்கள் இருப்பின், உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் செய்யும் குற்றங் குறைகளை மன்னித்து விடுங்கள்.

பிறரது நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிறரிடம் நல்ல நட்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அவர்களது நட்பை நல்லவிதமாக மதித்து நடந்து கொள்ளுங்கள்.

பிறர் உங்களிடம் ஆலோசனை கேட்டு வந்தால், சரியான முறையில் ஆலோசனைகளை வழங்குங்கள்.

அவருக்குச் சம்பந்தமில்லாதவற்றை அல்லது தொடர்பில்லாதவற்றைக் குறித்து அவரிடம் பேசாது, அவரை விட்டு விடுங்கள்.

தேவை அல்லது அவசரம் ஆகிய அத்திவாசிய நோக்கமின்றி எதனையும், எதையும் யாரிடமும் கேட்டுப் பெறாதீர்கள்.

ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்தால், உங்கள் வருகை குறித்து இருந்தாலும் சரி அதனை குறித்த நேரத்தில் நிறைவேற்றுங்கள்.

சந்திப்பதற்கான நேரங் குறித்து வாக்குறுதி அளித்திருந்தால், அதனையும் நிறைவேற்றுங்கள்.

பிறரது கோபம் மற்றும் எதிர் வினைகளிலிருந்தும் நீங்கள் தவிர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதனைப் பின்பற்றுவதிலே தனிக் கவனம் எடுத்துச் செயல்படுகின்றவர்களுடன், உங்களது உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

எப்பொழுதும் பொறுமையுடன் இருங்கள்.

உங்களிடம் யார் வம்பிழுத்து வலுச்சண்டைக்கு வந்தார்களோ, அவர்களுக்கு ஸலாத்தினைத் தெரிவியுங்கள்.

அத்தகையவரது குடும்பம் மற்றும் உறவுகளின் நலன் குறித்து தான் மிகவும் அக்கறை கொண்டவனாக இருக்கின்றேன் என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.

வெட்கமுடையவராக இருங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் குறித்து திருப்தி கொண்டவராக இருங்கள்.

பிரச்னைக்குரிய விசயங்களை தூர எறிந்து விட்டு, அதி முக்கியமான விசயங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்.

தீயோர்களுடன் நடந்து கொள்ளும் பொழுது நீதி நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கிடையில் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டு, உறவுப் பாலத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்மையானவற்றைச் செய்ய நாடுகின்றவர்களுக்கு, அதற்கான வழிகளைக் காட்டிக் கொடுங்கள்.

மனமுடைந்து போன இருவரிடையே நீதியுடன் சமாதானம் செய்து வையுங்கள்.

செயல்பாடுகளின் பின்விளைவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யுங்கள்.

பிறரிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

பிறர் உங்களிடம் ரகசியமாக இருக்கட்டும் என்று கூறி வைத்தவற்றையும், இன்னும் பிறரைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்ட ரகசியங்களையும் எப்பொழுதும், பாதுகாப்பாகவே வையுங்கள். அவற்றைப் பிறரிடம் கூறி பிறரது அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி விடாதீர்கள்.

முஸ்லிம்களுடைய கண்ணியத்தைக் குலைக்கக் கூடிய காரியத்தை செய்து விட்ட முஸ்லிம் சகோதரருக்காக, அவர் செய்து விட்ட அந்த தவறுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்.

உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களுக்கு தீங்கையே செய்து விடாமல், உங்களது உற்ற நண்பர்களை எப்படி மன்னிப்பீர்களோ அவ்வாறே அவரையும் மன்னியுங்கள்.

பிறரைச் சந்திக்கும் பொழுது, குதூகுலமான முறையில் சந்தியுங்கள்.

நல்ல நண்பர்களுடன் கலந்துறவாடுங்கள், கெட்ட நண்பராக இருந்து விட்டாலோ..! அவருக்கு ஒரு ஸலாம் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டே நகர்ந்து விடுங்கள்.

ஒருவர் அந்த இடத்தில் இல்லாத நிலையில், அவரைப் பற்றி பிறர் குறைகூறுவார்களென்றால், அந்த இடத்தில் உங்களது அந்த நண்பர் இருந்தால், எவ்வாறு தனது நியாயங்களைக் கூறி வாதாடுவாறோ அவ்வாறே, உங்களது நண்பருக்காக நீங்கள் பரிந்து பேசுங்கள்.

வழி தவறியவர்களுக்கு வழி காட்டுங்கள், குறிப்பாக இரண்டு கண்ணையும் இழந்தவர்களுக்கு நீங்களாகவே சென்று அவர்களுக்கு வழி அறிய உதவுங்கள்.

எப்பொழுதும் சிக்கல் நிறைந்தவராகவே இருக்காதீர்கள், உங்களை அணுகுபவர்களுக்கு எளிதானவராகவே இருங்கள்.

கொடுத்துதவுபவராக இருங்கள், அதற்காக கையை ஒரேயடியாக விரித்தும் விடாதீர்கள்.

ஏழை, எளியோருக்காக இரக்கப்படுங்கள், அவர்களது பெற்றோர்கள் மீது அன்பு காட்டுங்கள்.

பிறர் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்த தவறுக்காக அவர் மீது பழிக்குப் பழி வாங்கத் துடிக்காதீர்கள். அவர் செய்த தவறின் பின்விளைவுகள் பற்றி அவருக்கு எடுத்துச் சொல்வதன் மூலம், அவர் அறியாத ஒன்றை நீங்கள் அவருக்கு கற்றுக் கொடுங்கள்.

மோசமான குணங்கள்

சமூக உறவு மேம்பாட்டை வளர்க்க விரும்புகின்ற ஒருவர், சமூக உறவுகளைச் சிதைக்கக் கூடிய காரணங்களைப் பற்றியும் அறிந்து, அவற்றிலிருந்து தவிர்ந்து வாழ்வதும் கடமையாகும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அது சமூக உறவுகளைப் பாதிப்படையச் செய்யக் கூடிய, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, சமூக உறவுகளை மேம்படுத்துபவைகள் குறித்து அறிந்து வைத்திருக்கக் கூடிய ஒருவர், பாதிப்படையச் செய்யக் கூடியவைகளையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

ஒரு முஸ்லிம் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளக் கூடியவைகள் :

உணர்ச்சி வசப்படுபவராக, எளிதில் கோபமடைபவராக இருத்தல் கூடாது.

பிறரிடம் கெட்ட உறவுகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

பிறருக்குத் தேவையற்ற அம்சங்களைப் பற்றி அவரிடம் பேசாதீர்கள்.

ஆணவம் கொள்ளாதீர்கள். குறிப்பாக ஒருவர் ஏழையாக இருப்பார். ஆனால் பிறரிடம் பழகும் பொழுது தன்னை மிகப் பெரும் செல்வந்தர் போலக் காட்டிக் கொள்வார், ஆனால் மற்றவர்கள் அவர் வசதி இல்லாதவர் என்று அறிந்திருந்திக்கின்ற நிலையிலும் இவ்வாறு அவர் செயல்படுவார். இது ஒரு முஸ்லிமிடம் இருக்கக் கூடாத செயலாகும்.

பிறரை குற்றம் சுமத்திக் கொண்டே இருக்காதீர்கள்.

பிறர் உங்களது உரையாடலைக் கேட்க விருப்பமில்லாத நிலையிலும், உங்களது பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் அல்லது அவர்களே உங்களைத் தவிர்த்து விடுவார்கள்.

இரண்டு முகம் காண்பிப்பவராகவும் இருக்காதீர்கள்.

பிறரது மூதாதையர்கள் பற்றி தோண்டி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்.

முஸ்லிம் சகோதரனது கஷ்ட காலத்தைப் பார்த்து, சந்தோசப்படாதீர்கள்.

இறந்து விட்ட முன்னோர்கள் அல்லது நல்ல அந்தஸ்துள்ள பெரியார்களைப் பற்றி குறை சொல்லித் திரியாதீர்கள்.

அடுத்தவர் குறைகளை வெளிப்படுத்துவதற்கென்றே, அவர்களது குறைகளைத் தேடி அலையாதீர்கள்.

சந்திக்க இயலாத நிலையைத் தவிர, ஒரு முஸ்லிமிடருந்து இன்னொரு முஸ்லிம் மூன்று நாளைக்கு மேல் தவிர்ந்து வாழக் கூடாது.

பிரச்னைகளை உருவாக்குபவராகவும், குழப்பங்கள் விளைவிப்பராகவும் இருக்காதீர்கள்.

ஒருவர் அல்லது ஒருத்தியைப் பற்றிக் கூறும் பொழுது, அது உண்மையாக இருந்தாலும் கூட, பிறர் விரும்பாத ஒன்றை அல்லது அவர் வெறுக்கக் கூடிய ஒன்றைப் பற்றி பிறரிடம் கூறித் திரியாதீர்கள்.

பிறருக்குப் புரியாத புதிராகவும் நீங்கள் இருந்து விடாதீர்கள்.

பிறரது விவகாரத்தில் எப்பொழுதும் மூக்கை நுழைத்துக் கொண்டே இருக்காதீர்கள்.

உளவு வேலை பார்க்காதீர்கள்.

மக்களுக்குப் பயன்படுகின்ற பொருள்களை போட்டி போட்டுக் கொண்டு, போட்டியின் காரணமாக அதன் உரிய விலையை விட உயர்த்திக் கேட்காதீர்கள்.

பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள்.

முஸ்லிம் சகோதரனை வெறுக்காதீர்கள்.

பிறரது கெட்ட நடத்தைகள் பற்றி புறம் பேசாதீர்கள்.

பிறரை ஏளனம் செய்வது மற்றும் நக்கலாகச் சிரிப்பது, குத்திப் பேசுவது அல்லது இரட்டை அர்த்தத்துடன் பேசாதீர்கள்.

பிறரை கண்ணியக் குறைவாக எடுத்துக் காட்டி, அவர்களை மட்டம் தட்டுவது மற்றும் வழி கெடுத்தும் விடாதீர்கள்.

ஏமாளியாகவும் அல்லது ஏமாற்றுபவராகவும் இருக்காதீர்கள்.

பொருளாதாரப் பிராணியாகவோ அல்லது கஞ்சனாகவோ இருந்து விடாதீர்கள்.

நயவஞ்சகத்தனத்துடனோ அல்லது பயத்தைக் கட்டுப்படுத்த இயலாதவராகவோ அல்லது ஆபத்தான வேலைகளில் அதனை விட்டு வெருண்டோட இயலாதவராகவும் இருந்து விடாதீர்கள்.

சடைவுடனும், எப்பொழுது பார்த்தாலும் குற்றம் சொல்லிக் கொண்டும், எதிலும் திருப்தி அடையாதவராகவும் இருக்காதீர்கள்.

உதவி செய்வது கொண்டும், தான தர்மங்கள் செய்வது கொண்டும், பரோபகாரத் தன்மை கொண்டும் பிறரது கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள்.

சுயநலக்காரராகவோ, தன்னைத் தானே பெரியவராகவோ மற்றும் தன்னுடைய தேவைகள் நிறைவேறினால் போதுமானது, பிறர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பது போன்ற குணமுடையவராக இருக்காதீர்கள்.

பிறருக்கு உதவி செய்ய ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வாறு உதவி செய்பவரை உதவி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தாதீர்கள்.

ஒருவரது முன்னிலையிலேயே அவரைப் பற்றிப் புகழாதீர்கள் அல்லது தரம் தாழ்த்திப் பேசாதீர்கள்.

கெட்ட நடத்தை உடையவர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பதும் அல்லது பணக்காரர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பதும் தவறான பழக்கவழக்கங்களாகும்.

உரக்கப் பேசாதீர்கள்

பிறர் மீது வன்முறையாகவோ அல்லது கடினமாகவோ நடக்காதீர்கள்.

தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது அல்லது தன்னை அதிகப்படியாக தகுதியுள்ளவராக எண்ணிக் கொள்வதும் தவறாகும்.

பொய் பேசாதீர்கள்

பிறரிடம் பேசும் முறைகள்


--------------------------------------------------------------------------------



பேசுவதும் - கேட்பதும்



பேச்சுக் கலை என்பது மக்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய சிறந்ததொரு ஊடகச் சாதனமாகும். இது ஒரு மனிதனின் சுய கௌரவம் மற்றும் பண்பாடுகளை வளர்த்துக் கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் பயன்படுவதாக அமைகின்றது.



சிறந்த முறையில் தெளிவான முறையில் பேசுவது ஒரு மனிதனின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும், ஒரு நல்ல முஸ்லிம் இந்தப் பண்புகளைக் கைவரப் பெற்றவனாக இருத்தல் வேண்டும். ஒரு ஹதீஸின்படி, ஒருவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

ஒரு முஸ்லிம் ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசக் கூடாது, அச்சமயங்களில் இது அமைதியாக இருக்கக் கூடிய நேரம் என்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும். வெட்டிப் பேச்சுக்களில் பொய்யும் மற்றும் வீணான பேச்சுக்களும் தான் அதிகம் இருக்கும். இவ்வாறாக வேளைகளில், பேசக் கூடியவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்துவது அங்கிருக்கக் கூடிய முஸ்லிமின் கடமையாகும். வெட்டிப் பேச்சுக்களில் ஈடுபடாமல் அமைதியாக இருப்பது என்பது ஒரு பண்பாடான பழக்க வழக்கமாகும். இது அடுத்தவர்களை எரிச்சலடையச் செய்யாது.

தனக்கு சாதகமோ அல்லது பாதகமோ நேரிடினும் ஒரு முஸ்லிம் எப்பொழுதும் உண்மையையே பேச வேண்டும். கசப்பானதாக இருப்பினும் சரியே, உண்மையை எப்பொழுதும் பேச வேண்டும்.

ஒன்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஒரு முஸ்லிம் தான் எதைப் பற்றிப் பேசப் போகின்றோம் என்பதைப் பற்றி நன்கு ஆராய்ந்து பேச வேண்டும். தான் மன்னிப்புக் கேட்கும் விதத்தில் அல்லது வருத்தம் தெரிவிக்கும் விதத்தில் அமைந்து விடக் கூடிய பேச்சுக்களைக் கண்டிப்பாக முன் கூட்டியே தவிர்ந்து பேசுவது ஒரு முஸ்லிமிற்கு அழகாகும்.

பேச்சில் எளிமையும், கருத்துச் செறிவும் அமையப் பேசுவது சிறப்பான பேச்சுக் கலையாகும். ரொம்பவும் நிறுத்தி நிதானித்து மற்றும் விட்டு விட்டு நிறுத்தி நிறுத்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற விதத்தில் வார்த்தை ஜாலங்கள் மற்றும் கடினமான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பார்வையாளர்களை அமைதியாகப் பார்த்து, அவர்கள் மீது தாக்கம் ஏற்படுவது போல் பேசுவது விரும்பத்தக்கதாகும்.

ஒவ்வொரு பேச்சுக்கும் அதன் தலைப்புக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருக்கின்றன. எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து உரையாற்ற வேண்டும்.

ஒரு முஸ்லிம் தான் என்ன பேசுகின்றோமோ அதைப் பற்றிய தெளிவான அறிவும் மற்றும் மிகச் சரியான ஆதாரம் மற்றும் உண்மைத் தகவல்களுடன் உள்ளவற்றையே பேச வேண்டும்.

பேசும் உரைகளை சரியான முறையில் பார்வையாளர்களால் கிரகித்துக் கொள்ள இயலவில்லை எனில், அதனை மீண்டும் அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி விளக்கிச் சொல்வது பேசுபவரது பண்பாடான செயல்பாடாகும்.

அவசரஅவசரமாக பேசிக் கூடாது. ரொம்பவும் மெதுவாகவும் அல்லது மிகவும் வேகமாகவும் பேசுவதையோ மற்றும் உரத்த சப்தத்துடன் அல்லது மிகவும் மெதுவாகவும் பேசுவதைத் தவிர்த்துக் கொள்வதுடன், இத்தகைய பேச்சுக்கள் கேட்போரை சளிப்படையச் செய்து விடும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் போல இரண்டு வார்த்தைகளுக்கிடையே மிக நீண்ட இடைவெளி கொடுத்து நிறுத்தி நிதானித்துப் பேசுவதும் கூட பார்வையாளர்களைச் சளிப்படையச் செய்து விடும்.

Sunday, March 28, 2010

ஈமானின் பலவீனங்கள்

ஈமானின் பலவீனங்கள்

ஷேக் முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜத்

ஈமானின் பலவீனத்திற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன, அவையாவன :

இறைவனால் தடுக்கப்பட்டவற்றை மற்றும் பாவமான காரியங்களில் வீழ்ந்து விடுவது :-

சிலர் பாவமான காரியங்களிலேயே வீழ்ந்து கிடப்பார்கள், மற்றும் சிலர் பலவிதமான பாவமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பாவமான காரியங்களைச் செய்ய ஆரம்பித்து விடுவார்களென்று சொன்னால், அதுவே ஒட்டிப் பிறந்த பழக்கமாக மாறி, காலப்போக்கில் அவை பாவமான காரியங்களாகவே அவர்களுக்குத் தோன்றாத அளவுக்குச் சென்று விடும். பிறர் அறியாதவண்ணம் செய்து கொண்டிருந்த பாவமான காரியங்களைப் பற்றிய பாரதூரங்களைப் பற்றி எப்பொழுதும் அவர் கவலைப்படாதவராக மாறி விடுவாரோ, அப்பொழுது மறைவாகச் செய்து கொண்டிருந்த அந்தப் பாவமான காரியங்களை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்து விடுவார். இன்னும் அந்தப் பாவம்.., ஒரு தவறாகவே அவருக்குத் தோன்றாது.

என்னுடைய உம்மத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நல்லவர்களே, யார் பாவங்களை வெளிப்படையாகச் செய்கின்றார்களோ அவர்களைத் தவிர, உதாரணமாக, ஒரு மனிதன் இரவில் செய்ததை, காலையை அவன் அடைந்ததும் அல்லாஹ் அவன் செய்ததை மறைத்து விடுகின்றான், (பாவம் செய்த) அவன் ஓ! இன்ன மனிதனே, நான் இன்ன இன்னதைச் செய்தேன் என்று கூறி விடுகின்றான். இரவு முழுவதும் அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்தான், ஆனால் இறைவன் மறைத்தை இவன் வெளிப்படுத்துகின்றான். (புகாரி, ஃபத்ஹுல்பாரி 10ஃ486)

ஒருவன் தனது இதயம் இறுகி கடினமாகி விட்டதாக உணர்வது:-

ஒரு மனிதன் தனது இதயம் கடினமாகி அதனுள் எதுவும் புக முடியாத அளவு பாறை போல் இறுகி விட்டதாக உணர்வது. அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் :

இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறையைப் போல் ஆயின் அல்லது, (அதை விடவும்) அதிகக் கடினமாயின் (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. (2:74)

எவனது இதயம் கற்பாறையைப் போல் இறுகி விட்டதோ, அவனது இதயத்தில் மரணத்தைப் பற்றியோ அல்லது இறந்த மனிதர்களைப் பார்ப்பதனாலோ அல்லது மண்ணறையைப் பார்ப்பதனோலோ அவனுக்கு அந்த மரணத்தைப் பற்றிய பயம் தோன்றாது. இன்னும் மரணத்திற்குப் பின் சந்திக்கவிருக்கின்ற மறுமையைப் பற்றிய அச்சமும் தோன்றாது. மேலும் அவன் தனது தோளில் மைய்யித்தைச் சுமந்து சென்றாலும் சரியே! அவன் அந்த மையித்தை மண்ணறையில் போட்டு மூடி விட்டு, அந்த மண்ணறைகளுக்கு ஊடே நடந்து சென்றாலும் கூட பாறை போல இறுகி விட்ட அவனது மனதில் மரணத்தைப் பற்றிய சிந்தனையையோ, மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றியோ எந்தவித சிந்தனையையும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய படிப்பினையையும் அவனால் பெற்று விட இயலாது.

விதிக்கப்பட்ட கடமைகளை அல்லது வணக்க வழிபாடுகளைச் செய்யாமல் இருப்பது :-

இதன் மூலம் அவனது மனது அலைபாயக் கூடியதாகவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல் மற்றும் பிரார்த்தனை புரியும் பொழுதும் அவனது மனது ஒர்மையாக இல்லாமல், அவன் எந்த வழிபாடுகளைச் செய்கின்றானோ அதன் மீது முழுமையான கவனத்தைச் செலுத்த இயலாமல் ஆகி விடும். அவன் என்ன கூறிக் கொண்டிருக்கின்றான் என்பதைப் பற்றி அவனுக்கு ஞாபகமே இருப்பதில்லை. இன்னும் தொழுகையின் பொழுது சில துஆக்களை மனனமிட்டவாறு கூறிக் கொண்டே இருப்பான், ஆனால் அந்த துஆவின் அர்த்தம் என்னவென்பது பற்றி அவன் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

எவன் இறைவனைப் பற்றி அச்சமற்றிருக்கின்றானோ, இத்தகையவர்களுடைய துஆக்களை இறைவன் அங்கீகரிப்பதில்லை. (திர்மிதி 3479, அல் சில்சிலாஹ் ஸஹீஹ் 594).

வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனம் மற்றும் பொடுபோக்குத் தன்மை. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.

இன்னும் சில சிறப்பு வழிபாடுகளில் கூட இவர்கள் கலந்து கொள்வதைத் தவிர்த்து விடக் கூடியவர்களாக இருப்பார்கள். இதன் காரணம் என்னவெனில், இத்தகைய மனிதர்கள் இறைவன் வழங்கவிருக்கக் கூடிய சிறப்பு வெகுமதிகளைக் கூட ஆர்வம் காட்டுவதில்லை, எனவே தான் அவர்களுக்கு ஹஜ் செய்வதற்கான தகுதிகள், வாய்ப்புகள் இருந்தும் அதனைத் தாமதப்படுத்தக் கூடியவர்களாகவும், இறைவழியில் போராடக் கூடிய தகுதிகள் இருந்தும் அதனைத் துச்சமாக மதிக்கக் கூடியவர்களாகவும், கூட்டு வணக்க வழிபாடுகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை உதாசினம் செய்து வாழக் கூடியவர்களாகவும், ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதற்குச் சக்தி இருந்தும் அதனை நிறைவேற்றாதவர்களாகவும் இருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறைவன் அவர்களை நரக நெருப்பில் இடும் வரையிலும், (கூட்டு வணக்க வழிபாடுகளில்) முன் வரிசையில் நிற்பதனின்றும் அவர்கள் பின் தங்கியே இருந்து கொண்டிருப்பார்கள். (அபூதாவுது 979).

இத்தகைய மனிதர்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றாமல் தூங்கி விட்டாலோ அல்லது அதனை மறந்து விட்டாலோ இன்னும் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ள சுன்னத்தான, நபிலான வணக்க வழிபாடுகள் இன்னும் திக்ருகள் போன்வற்றில் ஈடுபடாமல் இருப்பது பற்றி எந்த குற்ற உணர்வும் இல்லாதவர்களாக இருந்து கொண்டிருப்பார்கள். இன்னும் விடுபற்றவற்றை நிறைவேற்ற வேண்டுமே என்ற அச்சம் கூட அவர்களது மனதில் இருப்பதில்லை. அவற்றை நிறைவேற்றுவதுமில்லை. இன்னும் பர்ளு கிஃபாயா போன்ற, அதாவது சிலர் அவற்றைச் செய்தால் போதும் ஏனையோர்கள் மீது அது பற்றிய கேள்வி கணக்கு இருக்காது, ஆனால் யாருமே செய்யாத பட்சத்தில் அனைவருமே அது பற்றி வினவப்படுவார்கள் என்ற நிலையில் உள்ளவற்றைக் கூட அவர்கள் நிறைவேற்ற முன்வருவதில்லை.

எனவே இத்தகையவர்கள் ஈதுப் பெருநாள் தொழுகை, கிரகணத் தொழுகை, மழைத் தொழுகை இன்னும் ஜனாஸாத் தொழுகையின் பொழுது கூட வந்து கலந்து கொள்வதில்லை. இறைவனுடைய அருட்கொடைகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. இத்தகையவர்களின் நிலை இறைவன் திருமறையிலே ஒருசிலர் பற்றிக் கூறியிருப்பவற்றுக்கு எதிர்மறையாகவல்லவா இருந்து கொண்டிருக்கின்றது.

நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். (21:90)

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழக்கமாகப் பின்பற்றுவதற்கு அறிவுறுத்தி இருக்கின்ற சில சுன்னத்தான வணக்க வழிபாடுகளை அவன் நிறைவேற்றுவதில்லை. அதாவது இரவுத் தொழுகை, காலையில் விரைவாக எழுந்து பள்ளிக்குச் சென்று கடமையான தொழுகைக்காகக் காத்திருத்தல், நபிலான தொழுகை, இன்னும் துஆக்கள், இவை போன்றவைகள் அவனது வாழ்வில் நடைபெறாத அம்சங்களாக இருத்தல், தனிமையில் இருக்கும் பொழுது பாவ மன்னிப்புக்காக இரண்டு ரக்அத் தொழுவதில்லை, நாட்டங்கள் நிறைவேறுதவற்காகவும் நடைபெற வேண்டியவை நல்லனவாக நடப்பதற்கும் தொழக் கூடிய இஸ்திகாராத் தொழுகையும் அவன் கண்டு கொள்வதில்லை.

மன இறுக்கம், அலைபாயும் மனது, சோர்வாக இருத்தல் இத்தகையவர்கள் சமூகத்தில் மதிப்பிழந்தவர்களாகவும் இன்னும் சின்னச்சின்ன விசயங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இன்னும் இவர்களிடம் சகிப்புத் தன்மை என்பதே இருக்காது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஈமான் என்பது பொறுமையும் சகிப்புத் தன்மையும் தான் (அல் சில்சிலத்துல் ஸஹீஹ் 554, 2ஃ86) இன்னும் இறைநம்பிக்கை கொண்டவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்றால், நட்புக் கொள்ளத் தூண்டக் கூடியவர்களாகவும் இன்னும் அவர்களால் பிறர் பாதுகாப்புப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். எவரிடம் நட்புக் கொள்ளக் கூடிய தன்மையும், பிறர் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளக் கூடிய தன்மையும் அற்றவராக இருப்பாரோ அவரிடம் எந்த நன்மைகளும் இல்லை. (அல் சில்சிலத்துல் ஸஹீஹ் 427)

குர்ஆனின் வழிகாட்டுதலின் பக்கம் அவன் கவனம் செலுத்துவதில்லை, அது கூறக் கூடிய சொர்க்கத்தை விரும்புவதில்லை, நரகத்தைக் குறித்து அச்சம் கொள்வதில்லை, அதன் கட்டளைகளை ஏற்று நடப்பதில்லை, மாறாக அது வழங்கக் கூடிய கட்டளைகளையும், தடுத்திருப்பவற்றையும் பின்பற்றுவதில்லை. இன்னும் மரணித்த பின் மீண்டும் எழுப்பப்படக் கூடிய அந்த நாளைப் பற்றிய குறிப்புகளைச் சிந்தித்து உணர்வதில்லை. எவரது ஈமான் பலமிழந்து இருக்கின்றதோ, அத்தகைகயவர்களுக்கு முன் குர்ஆன் ஓதப்படும் பொழுது மிகவும் சடைந்து சோம்பேறித்தனமாக அவர் காட்சி அளிப்பார்கள், இன்னும் தொடர்ந்து ஓதுவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. எப்பொழுதெல்லாம் அவர் குர்ஆனை ஓதுவதற்காக திறக்கின்றாரோ, அதனை விரைவில் மூடி வைப்பதற்கே அவர் விரும்பக் கூடியவராக இருப்பார்.

இறைவனைப் பற்றி நினைவு கூறக் கூடிய நேரங்களில் அல்லது பிரார்த்திக்கக் கூடிய நேரங்களில் அவர் இறைவனது சிந்தனை குறித்து தனது மனதை ஒருமுகப்படுத்துவதில்லை, இன்னும் பிரார்த்தனை புரியக் கூடிய சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்தக் கூடிய அவர், அந்தக் கைகளை விரைவில் கீழே போட்டு விடக் கூடியவராக இருப்பார். இத்தகைய நயவஞ்சகர்கள் பற்றி அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான்

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (4:142)

இன்னும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கின்ற வரம்புகள் மீறப்படும் பொழுது அவற்றைக் காணும் பொழுது அவனுக்கு கோபம் வருவதில்லை, ஏனென்றால், அவனது இதயத்தில் கொஞ்சம் கூட ஈமானிய நெருப்பு இல்லாமல், அது அணைந்து விட்டதைத் தான் அது குறிக்கின்றது., எனவே தான் தீமைகளைக் காணும் பொழுது, அவற்றைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் அவனால் எடுக்க முடிவதில்லை, தீமை புரிபவர்களைத் தடுத்து அவர்களை நன்மையான காரியங்களின் பால் திருப்புவதற்கும் அல்லது அவனது அந்தத் தீமைகளை விட்டும் அப்புறப்படுத்தவும் அவனால் இயலுவதில்லை. அவன் இறைவனது திருமுகத்திற்காகக் கூட இத்தகைய தீமைகளைக் கண்டு கோபம் அடைவதில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இத்தகையவர்களது இதயங்கள் பலவீனங்களால் கொள்ளையிடப்பட்டு விட்டன என்றார்கள்.

இதயம் சோதனைக்கு மேல் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது, அதனால் பாதிக்கப்படும் இதயத்தில் கறுப்பு நிற கறை படிய ஆரம்பிக்கின்றது, இந்தக் கறுப்புக் கறை முற்றிலும் இதயத்தில் பரவி, அதனை மூடி விடுகின்றது, அத்தகைய இதயத்தினால் எந்த நன்மையானவற்றை ஏற்றுக் கொள்ளவோ அல்லது தீமைகளைக் கலைந்து விடவோ இயலுவதில்லை, அவனது இச்சை எதனைச் செய்யத் தூண்டுகின்றதோ அதனைத் தவிர (முஸ்லிம் 144).

நன்மையானவற்றை நேசித்தலும், தீமையானவற்றை வெறுத்தலும் அவனது இதயத்தை விட்டும் நீங்கி விடுகின்றது, அனைத்துமே இவர்களுக்குச் சமமானது, இன்னும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் எந்த எண்ணமும் இவர்களிடம் இருப்பதில்லை. இன்னும் பூமியில் ஒரு தீமை நிகழ்த்தப்பட இருக்கின்றது என்று அறிந்தால், அது நடைபெற வேண்டும் என்று விரும்புவான், இத்தகைய நிலையிலும் அந்தத் தீமை நிகழவிருப்பதை ஆமோதித்த சாட்சியாக, அதன் தீமையில் பங்கு கொண்டவனாகவும் அவன் ஆகி விடுகின்றான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நன்மையை விரும்புவதும் இன்னும் தீமையை வெறுப்பதும் அவனது இதயத்திலிருந்து விடை பெற்று விடும். இத்தகைய நபர்களுக்கு அனைத்துமே சமமமானதாகும். இன்னும் அவன் நன்மையை ஏவுவதற்கும் அல்லது தீமையை விட்டு தடுப்பதற்கும் முயற்சிக்க மாட்டான். இன்னும் தீமையான காரியம் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது என்று கூறினால், அது நடக்கட்டும் என்றே அவன் விரும்புவான். இந்த நிலையில் தீமைக்கு சாட்சியமாக இருப்பவனைப் போல, அது நடப்பதை அனுமதித்தவனும் அதே தீமையைச் செய்தவன் போலவான் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கீழ்க்காணும் நபிமொழி மெய்ப்பிக்கின்றது :

இந்தப் பூமியில் ஒரு அநியாயம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அதனைப் பார்த்து அதற்குச் சாட்சியாகவும் இருந்து இன்னும் அதனை வெறுத்தவர், அந்த பாவத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவர் போலாவார். இன்னும் அந்த பாவமான காரியத்தைப் பார்த்த சாட்சியல்ல. மாறாக, அந்தப் பாவத்தை அங்கீகரித்தவராக இருப்பாரென்றால், அந்தப் பாவத்தைத் (தடுக்காது) சாட்சியாக இருந்த குற்றத்தைச் செய்தவர் போலாவார். (அபூதாவூது 4345, ஸஹீஹ் அல் ஜாமிஃ 689).

அந்தப் பாவத்தை அங்கீகரித்தது அவரது இதயத்திலிருந்து வெளியானதான (சம்மதமா)கும், அந்த சம்மதமே அந்த பாவத்திற்கான சாட்சியாக அவனை ஆக்கி பாவமான காரியத்தைச் செய்தவனாக ஆக்கி விடுகின்றது.

புகழை விரும்புவதும் இன்னும் தலைமையை விரும்புவது :-

தலைமைத்துவத்தில் இருக்கின்ற பாரதூரங்கள் பற்றி அறியாமல் அந்தப் பதவியை விரும்புவது. எனவே, தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைமைத்துவத்தை விரும்புவது குறித்து மிகவும் எச்சரிக்கை செய்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தலைவர்களாவது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், அதன் காரணமாக மறுமை நாளிலே நீங்கள் கைசேதப்பட வேண்டியதிருக்கும், எனினும் அதன் ஆரம்பம் மிகவும் இலகுவானது, அதன் முடிவு மிகவும் கடுமையானது. தலைமைத்துவத்தின் ஆரம்பத்தில் ஒருவருக்கு அதிகாரத்தையும், வளத்தையும் கொண்டு வரும், ஆனால் பின்பு கொலை செய்யப்படும் அளவுக்கு ஆபத்தானதும், இன்னும் எவராவது அவரைப் பதவியிலிருந்து தூக்கிய எறிய முயற்சிக்கவும் கூடும், இன்னும் மறுமை நாளிலே அவர் மீது யாராவது வழக்குத் தொடரும் நிர்ப்பந்தத்திலும் அவரைத் தள்ளி விடச் சந்தர்ப்பமும் உண்டு. (மூலம் : புகாரி 6729)

நீங்கள் விரும்பினால் தலைமைத்துவம் என்ன என்பது பற்றி நான் உங்களுக்கு அறிவித்துத் தருவேன். முதலாவது, அது குற்றம் சாட்டப்படக் கூடியது, இரண்டாவது, வருந்தத்தக்கது, மூன்றாவது, மறுமைநாளிலே தண்டனையைப் பெற்றுத் தரக் கூடியது. யார் நேர்மையாகவும், நீதமாகவும் நடந்து கொண்டார்களோ அவர்களைத் தவிர. (தபராணி - அல் கபீர் 18ஃ72).

யூசுப் (அலை) அவர்கள் நேர்மையாக ஆட்சி செய்தது போன்று, நேர்மையாகவும், நீதமாகவும், தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்பை கடமையுணர்வுடன் ஏற்று நடந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலே தவிர. இன்னும் மேலே நாம் கூறிய நீதமாக நடக்கக் கூடிய தகுதிப் பண்புகள் இருந்தும், தனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அதனை மறுப்பதே ஒரு நல்ல மனிதனுக்கு உள்ள பண்பாகும்.

மனிதர்கள் அமர்ந்திருக்கக் கூடிய சபையில் தலைவராக உட்கார விரும்புவதும், அங்கு நடக்கும் ஆலோசனைகளில் தன்னுடைய கருத்தை மட்டுமே அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதும், இன்னும் அதிகாரம் வகிக்கவும் விரும்புவதும், இத்தகைய சபைகளைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றேன், இத்தகைய தலைமையைக் கொண்ட சபையானது, ஆடுகளை அறுக்கும் பலிபீடங்கள் போன்றது. (புகாரி, 2ஃ439, ஸஹீஹ் ஜமாமிஃ 120)

இன்னும் சபையில் தான் நுழையும் பொழுது, மற்றவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்புவதானது, ஒருவரது மனதை பெருமைப்பட வைத்து நோயுறச் செய்து விடுகின்றது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், எவரொருவர் அல்லாஹ்வின் அடிமைகள் தனக்கு எழுந்து நிற்பதையிட்டு சந்தோஷமடைகின்றாரோ, அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும். (புகாரீ (அதபுல் முஃபர்ரத் 977, சில்சிலாஹ் அல் ஸஹீஹ் 357).

ஒருமுறை முஆவியா (ரலி) அவர்கள் இப்னுல் ஜுபைர் மற்றும் இப்னு ஆமிர் ஆகியோரைப் பார்க்கச் சென்றார்கள். இப்னு ஆமிர் அவர்கள் எழுந்து நிற்க, இப்னுல் ஜுபைர் உட்கார்ந்தே இருந்தார்கள், இப்னு ஆமீர் அவர்களைப் பார்த்து முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள், இப்னு ஆமீரே! அமருங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதன் தனக்காக எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்புகின்றானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் என்று கூறக் கேட்டிருக்கின்றேன் என்றார்கள். (அபூதாவூது 5229, புகாரீ, அதபுல் முஃபர்ரத் 977, அல் சில்சிலாஹ் 357).

ஆனால் எவனது மனதில் இறைநம்பிக்கை தெளிவாக இல்லையோ, அத்தகைய மனிதர்கள் மேலே நாம் கண்ட சுன்னாவைப் பின்பற்றும் பொழுது கோபமும், ஆத்திரமும் அடைவார்கள். இன்னும் இவர்கள் சபைகளில் நுழைந்தார்களென்றால், தனக்காக எவராவது எழுந்து நிற்பதையும், இன்னும் தனக்காக எழுந்து பிறர் இடம் தராதவரையும் அவர்கள் சந்தோஷமடைய மாட்டார்கள். இத்தகைய நடைமுறைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடுத்திருந்த போதிலும் கூட.

பிறர் வந்து உட்கார வேண்டுமென்பதற்காக உங்களது இடத்தை விட்டு நீங்கள் எழுந்திருக்காதீர்கள். (புகாரீ, அல் பத்ஹுல் பாரி 11ஃ62).

கஞ்சத்தனம் :

அல்லாஹ் அன்சாரிகளைப் பற்றித் தன்னுடைய திருமறையிலே கூறும் பொழுது :

தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித் தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (59:9)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் கஞ்சத்தனத்திலிருந்து தவிர்ந்து கொண்டார்களோ, அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். பலவீனமான ஈமான் கருமித்தனத்தை உருவாக்குகின்றது. கஞ்சத்தனமும் மற்றும் இறைநம்பிக்கையும் இரண்டும் இறைநம்பிக்கையாளரின் மனதில் ஒன்றாக இணைந்திருக்க முடியாது. (நஸயீ, அல் முஜ்தபா, ஸஹீஹ் அல் ஜாமிஃ 2678).

மேலும், கஞ்சத்தனம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். கஞ்சத்தனம் குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர்கள் இந்தக் கஞ்சத்தனம் காரணமாக அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தக் கஞ்சத்தனம் உலோபித்தனத்திற்கு வழி காட்டுகின்றது, எனவே அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பொருளாதாரங்களை பிற தேவையுள்ள மனிதர்களுக்கு வழங்காமல் கருமிகளாகி விடுகின்றார்கள், இந்தக் கருமித்தனம் இரத்த உறவுகளைக் கூட துண்டித்துக் கொள்ளத் தூண்டுகின்றது, உறவுகளைத் துண்டித்தும் விடுகின்றார்கள், இன்னும் கெட்ட நடத்தையையும் அது உருவாக்குகின்றது. எனவே அவர்கள் கெட்ட நடத்தை உள்ளவர்களாகவும் மாறி விடுகின்றார்கள். (சுநிழசவநன டில யுடிர னுயறழழனஇ 2ஃ324; ளுயாநநா யட-துயயஅiஇ ழெ. 2678).

கஞ்சத்தனம் மனிதனிடம் உருவாகி விடும் பொழுது, அவனது ஈமான் பலமிழந்து விடுகின்றது, இதன் காரணமாக அல்லாஹ்வுடைய திருமுகத்திற்காகக் கூட பிற மனிதர்களுக்குப் பொருட்களை வழங்குவதனின்றும் அவனது இதயம் கடினமாகி விடுகின்றது. இன்னும் சக சகோதரன் ஒருவன் இனச் சுத்திகரிப்பு, பஞ்சம், வறுமை போன்ற இக்கட்டான நிலைகளில் இருக்கும் பொழுது, அவனது நியாயமான தேவைகளைக் கருதி அவன் உதவி கோரும் பொழுது கூட, உதவி செய்ய மறுத்து விடுகின்ற கல் நெஞ்சக் காரனாக மாறி விடுகின்றான். இத்தகையவர்களை அல்லாஹ்வினுடைய இந்த வார்த்தையைத் தவிர வேறு வார்த்தைகளால் எச்சரிக்க முடியாது. அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் :

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்க மாட்டார்கள். (47:38)

நீங்கள் எதைச் செய்கின்றீர்களோ, அதனைப் பிறருக்குச் சொல்லுங்கள் :

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:2-3)

சந்தேகமில்லாமல் இதுவும் ஒரு நயவஞ்சகத்தனம் தான், இன்னும் இவர்களது நடவடிக்கைகள் அவர்களது சொல்லுக்கு மாற்றமாக இருக்கும், ஒத்துப் போகாது. இத்தகையவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்கள். இன்னும் சகமனிதர்கள் முன்னிலையில் வெறுக்கத்தக்க இழிவானவர்கள். நரகத்தைத் தங்களது இருப்பிடமாக ஆக்கிக் கொண்ட இவர்கள், சத்தியத்தை எடுத்து வைப்பவர்களது உண்மைத்துவத்தை அறிந்து கொண்ட போதிலும், அவர்கள் அதனை ஏற்று நடக்க மாட்டார்கள், இன்னும் இத்தகையவர்கள் நன்மையின் பக்கம் மக்களை ஏவுவார்கள். ஆனால் அவர்களது சொந்த வாழ்க்கையில் அவற்றைக் கடைபிடிக்க மாட்டார்கள், இன்னும் மக்களை தீமையை விட்டும் தடுப்பார்கள் ஆனால், தங்களது சொந்த வாழ்க்கையில் தீமை புரிந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.

இதுவரை அனுபவித்து வந்த வாழ்க்கையின் வசதிகள் எல்லாம் ஏதோ ஒரு அழிவின் காரணமாக ஒரு இஸ்லாமிய சகோதரனுடைய செல்வம் அழிந்து விடுமென்றால், இதுவரைக்கும் இறைவன் அவனுக்கு அருளி வந்திருந்த அருட்கொடைகளை இறைவன் அவனிடமிருந்து எடுத்து விட்டான் அல்லது மற்றவர்களைக் காட்டிலும் தன்னிடமே மிகவும் வித்தியாசமான பொருட்கள் இருந்து கொண்டிருக்கின்ற என்று பெருமை அடித்தானே அத்தகைய செல்வமும் அவனை விட்டும் அகற்றப்பட்டு விடுகின்றன.

ஒரு செயலை நீங்கள் செய்வதற்கு முன் இந்தச் செயல் நல்லதா? அல்லது கெட்டதா? நன்மையானதா? அல்லது பாவமானதா? என்று கேட்டுக் கொள்வதற்குப் பதிலாக, மக்ரூஹ் - விரும்பத்தகாதது என்பன போன்றவற்றை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். இன்னும் சிலர், இதனை நான் செய்யலாமா? கூடாதா? என்று கேட்காமல், இதனைச் செய்தால் மக்ரூஹ் தானே? என்றும் கேட்கின்றார்கள். இது ஒரு தவறான போக்காகும். இத்தகைய போக்கு அவரை தவறான அல்லது ஹராமான வழியில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். மேலும், இவர்கள் மக்ரூஹ் தானே இதனைச் செய்யலாம் தானே என்று ஆரம்பித்து இறுதியில் சந்தேகத்திற்குரிய அம்சங்களில் கூட விலகி இருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் சந்தேகத்திற்கிடமான விவகாரங்களில் விழுந்து விடுகின்றாரோ அவர் ஹராமானவற்றில் வீழ்ந்து விடுகின்றார், மேய்ப்பதற்கு அனுமதி இல்லாத இடத்திற்கு அருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கக் கூடிய இடையன், மிக விரைவிலேயே அந்த இடத்திற்குள் தனது கால்நடைகளை மேய விட்டு விடலாம். (புகாரி, முஸ்லிம்).

இன்னும் சிலர் சில செயல்பாடுகள் குறித்து மார்க்கத் தீர்ப்பைக் கேட்கின்றார்கள், அப்பொழுது இதனைச் செய்தால் ஹராமானதா? இல்லையா? என்று கேட்டு விட்டு, இதில் ஈடுபட்டால் எந்தளவு பாவகரமானது? என்றும் கேட்கின்றார்கள். இத்தகைய மக்கள், ஹராமானவற்றிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ள விரும்பாததைத் தான் காட்டுகின்றது. இருந்தபோதிலும் அவர்கள் முதல்நிலை ஹராமானவற்றை அவர்கள் செய்ய ஆரம்பித்து, பின் அவற்றை சிறு பாவங்களாகக் கருதி, இறுதியாக அல்லாஹ் விதித்திருக்கும் வரம்புகளை மீறவும் துணிந்து விடுகின்றார்கள். இதன் காரணமாக இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாளின் பொழுது சிலர் துஹாமா என்னும் மலையைப் போன்று மிக அதிகமான நன்மைகளையுடன் வருவார்கள், ஆனால் அல்லாஹ் அதனை தூசி போல ஆக்கி காற்றில் பறக்க விட்டு விடுவான் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த தவ்பான் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இத்தைகயவர்கள் பற்றி எங்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள், அதன் மூலம் நாங்களும் அத்தகைய மனிதர்களாக ஆகி விடாமல் தவிர்ந்து கொள்ள இயலுமல்லவா? என்று கேட்டார்கள், அதற்கு, அவர்கள் உங்களது சகோதரர்களாகவே இருப்பார்கள், உங்களைப் போலவே இருப்பார்கள், நீங்கள் தொழுவது போல அவர்களும் இரவில் நின்று தொழுவார்கள், ஆனால் இறைவன் விதித்திருக்கும் வரம்புகளை மீறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால், அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் மீறுவதற்குத் தயங்கவும் மாட்டார்கள். (இப்னு மாஜா 4245, ஸஹீஹ் அல் ஜாமிஃ 5028)

எனவே, ஹராமானவற்றை கொஞ்சம் கூட சங்கடமில்லாமல், வெறுப்பில்லாமல் செய்கின்றவன், அத்தகைய ஹராமானவற்றைத் தயங்கித் தயங்கி செய்பவனைக் காட்டிலும் மிக மோசமானவன். இருவருமே ஆபத்தில் தான் இருக்கின்றார்கள், ஆனால் தயங்கித் தயங்கிச் செய்பவனைக் காட்டிலும், முதலமாவன் மிகவும் மோசமானவன். பலவீனமான இறைநம்பிக்கை - ஈமானின் காரணமாக இத்தகையவர்கள் பெரும்பாவங்களைக் கூட சிறுபாவங்களாக எண்ணிக் கொள்வார்கள், இன்னும் சில வேளைகளில் தான் செய்வது பாவம் என்பது கூட அவர்களுக்கு உரைப்பதுமில்லை. இதன் காரணமாகத் தான், இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள், இறைந்பிக்கையாளர்களுக்கும் மற்றும் நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை இவ்வாறு விளக்கப்படுத்தி இருக்கின்றார்கள் :

இறைநம்பிக்கையாளன் பாவச் செயல்களைக் காணும் பொழுது, மலையின் அடியில் உட்கார்ந்திருக்கும் ஒருவன் மீது அந்த மலை விழுந்தால் எவ்வாறு இருக்குமோ அத்தகைய பயத்தைக் கொண்டிருப்பான், ஆனால் பாவச் செயல்களைக் காணும் ஒரு நயவஞ்சகன், அவனது மூக்குக்கு அருகில் ஒரு ஈ பறந்து சென்றால் எவ்வாறு எண்ணுவானோ அதனைப் போலக் கருதி, அதனைத் துச்சமாக மதித்து, தனது கையால் ஈ யை விரட்டுவது போல தட்டி விடுவான். (புகாரீ) (சுநிழசவநன டில யட-டீரமாயயசiஇ யட-குயவாஇ 11ஃ102; ளுநந யடளழ வுயபாடநநங யட-வுய'டநநஙஇ 5ஃ136இ pரடிட. டில யட-ஆயமவயடி யட-ஐளடயஅi).

எந்தச் சிறு நன்மையான காரியங்களையும், அவற்றினால் சிறுநன்மை தானே என்று ஆர்வம் காட்டாது விட்டு விடாதீர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு சிறு நன்மையான காரியங்களிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்கள். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அபூ ஜுரை அல் ஹுஜைமி (ரலி) வழியாக ஒரு ஹதீஸை அறிவிக்கின்றார்கள்,

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களே நாங்கள் பாலைவனத்திலே வாழுகின்ற நாட்டுப்புற அரபிகள். இறைவன் எங்களுக்கு அருள்புரிந்து பயன்படும் வகையில் ஏதாவது ஒன்றை எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு, எந்த சிறு நன்மையான காரியத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது ஒருவர் நீரருந்துவதற்கு ஏதுவாக ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு குவளைக்கு தண்ணீரை ஊற்றுவதாக இருந்தாலும் சரியே அல்லது உங்களது சகோதரனை புன்னகையுடன் நோக்கிப் பேசுவதாக இருந்தாலும் சரியே! (முஸ்னத் அஹ்மத்)

ஒரு மனிதர் நீரருந்த விரும்புகின்றார், அதற்காக கிணற்றிலிருந்து வாளியை வெளியில் எடுத்து அவரது தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீரை ஊற்றுவதும் கூட, சிறந்த காரியம்தான். அது ஒரு முக்கியத்துவம் இல்லாத செயலாக இல்லாதிருந்த போதிலும், அதனை எளிதாக எண்ணி விட வேண்டாம். அதே போல சந்தோசப் புன்னகை முகத்துடன் உனது சகோதரனை நோக்கிப் பேசுவதும், பள்ளியில் கிடக்கும் குப்பையை அகற்றுவதும், தூசியைத் துடைப்பதும், இன்னும் ஒரு சிறு புல்லை அங்கிருந்து நீங்கள் அப்புறப்படுத்தினாலும் கூட, அவற்றை எளிதாக எண்ணி விட வேண்டாம். இத்தகைய செயல்கள் உங்களது பாவங்களை மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடலாம், இறைவன் நீங்கள் செய்யக் கூடிய செயல்களின் பெருமதியை இட்டு, அதன் காரணமாக உங்களது பாவங்களை மன்னிக்கின்றான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதன் சாலையின் குறுக்கே கிடக்கும் மரத்துண்டைக் கண்டான், இறைவன் மீது சத்தியமாக, முஸ்லிம்களைக் காயப்படுத்தி விடுவதனின்றும் அவர்களைப் பாதுகாப்பதற்காக இதனை நான் அப்புறப்படுத்துகின்றேன், என்று அவன் அந்த மரத்தை அப்புறப்படுத்தியதன் காரணமாக இறைவன் அவனை சொர்க்கத்தில் புகுத்தினான். (முஸ்லிம் 1914).

இன்னும் சிலர் சிறு சிறு நன்மையான செயல்களைச் செய்வதை மிக ஏளமானதாகக் கருதுகின்றார்கள், இது அவர்களிடம் உள்ள குறையைத் தான் வெளிப்படுத்துகின்றது. இது குறிப்பிட்ட தண்டனைக்கு உட்பட்டதாகவும், இன்னும் இதன் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்துக் கொடுத்த நன்மைகளை இழக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களுக்குத் தொந்தரவு தரக் கூடிய விதத்தில் நடைபாதையில் கிடக்கக் கூடிய பொருளை யார் அப்புறப்படுத்துகின்றாரோ, அவரது கணக்கில் ஒரு நன்மை எழுதப்படுகின்றது, எவர் ஒப்புக் கொள்ளப்பட்ட நன்மைகளைப் பெற்றிருக்கின்றாரோ, அவர் சொர்க்கத்தில் நுழைவார். (புகாரி, அல் அதப் அல் முஃபர்ரத் 593, அல் ஸில்ஸிலத்துல் ஸஹீஹ் 5ஃ387)

முஆத் (ரலி) அவர்கள் ஒரு மனிதருடன் நடந்து கொண்டிருந்த பொழுது, நடைபாதையில் கிடந்த கல்லை எடுத்து (அப்புறப்படுத்தினார்கள்). அப்பொழுது (உடன்) வந்தவர் கேட்டார், என்ன இது? அதற்கு அவர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், (மனிதர்களுக்கு தொல்லை தரக் கூடிய) பாதையில் கிடக்கும் கல்லை யார் அப்புறப்படுத்துகின்றார்களோ, அவருடைய பெயரில் ஒரு நன்மை எழுதப்படுகின்றது, யார் நன்மைகளைப் பெற்றிருக்கின்றாரோ, அவர் சொர்க்கத்தில் நுழைவார். (தபராணி, 20ஃ101, அல் ஸில்ஸிலத்துல் ஸஹீஹ், 5ஃ387)

முஸ்லிம்களின் விவகாரத்தில் கவனயீனமாக இருப்பது மற்றும் இன்னும் நல்லமல்களின் பால் கவனயீனமாக இருப்பது, உதாரணமாக பிரார்த்தனைகள் மற்றும் தானதர்மங்கள் இன்னும் பிறருக்கு உதவி செய்தல் போன்றவற்றில் அசிரத்தையாக இருப்பது. இத்தகையவர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகம் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும், இனப்படுகொலைகளுக்கும், இன்னும் சமூக மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இத்தகைய அடக்குமுறைகளை அவன் மிக எளிதானதொன்றாக எடுத்துக் கொள்வான். இவற்றை எல்லாவற்றையும் விட தனது சுய பாதுகாப்பே பிரதானம் என்றும் அவன் கருதக் கூடியவனாகவும் இருப்பான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறைநம்பிக்கையாளர்களுக்கிடையில் நிலவுகின்ற நட்பானது உடலுக்கு தலை எவ்வளவு பிரதானமோ அவ்வாறு இருக்க வேண்டும். தனது சக முஸ்லிம் பாதிக்கப்படும் பொழுது, பாதிக்கப்பட்ட ஏதோ ஒரு உறுப்புக்காக உடம்பே அதன் வலியை உணர்வது போல இருக்க வேண்டும். (முஸ்னத் அஹ்மத் 5ஃ340) (ஆரளயென யுhஅயனஇ 5ஃ340; யட-ளுடைளடையவ யட-ளுயாநநாயா 'டீசநயமiபெ வாந வநைள ழக டிசழவாநசாழழன டிநவறநநn வறழ றாழ ரளநன வழ டிந உடழளந'. வுhநஇ 1137).

இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் :

அல்லாஹ்வினுடைய திருப்பொருத்தத்திற்காக அன்றி அல்லது இஸ்லாத்திற்காகவன்றி இருவர் நண்பர்களாக இருந்திட முடியாது, அவர்களில் ஒருவர் செய்யக் கூடிய முதல் பாவம் அவர்களைப் பிரித்து விடுகின்றது. (புகாரீ, அஹ்மது, ஸில்ஸிலத்துல் ஸஹீஹ், 637).

எனவே, ஒருவர் செய்யக் கூடிய தீய செயலானது, அல்லாஹ்வுக்காக இணைந்த அந்த இதயங்களில் பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களுக்கிடையே நிலவி வந்த சகோதரத்துவத்தையே பிளந்து விடுகின்றது. அவர்களுக்குள் உண்டான ஈமானின் பலவீனமானது, பாவங்களைச் செய்யத் தூண்டியது, அதன் காரணமாக அல்லாஹ் தன்னுடைய அடிமையாகிய அவர்களை தன்னுடைய அருள் என்னும் ரஹ்மத்தை இழக்கச் செய்தான், பின் அவர்களை இக்கட்டான நிலையில் விட்டு விட்டு, இறைநம்பிக்கையாளர்களின் குழுவிலிருந்தும் அவர்களை வெளியேற்றி, தன்னுடைய பாதுகாப்பிலிருந்தும் அவர்களை அப்புறப்படுத்தினான், அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை பாதுகாப்பதற்குப் போதுமானவனாக இருக்கின்றான்.

இஸ்லாம் என்ற மார்க்கமானது யார் வீட்டுச் சொத்துமல்ல, யாரும் உரிமை கொண்டாடி விட முடியாத உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மார்க்கமாகும். இத்தகைய மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள், இன்னும் இந்த மார்க்கம் சென்றடையாத உள்ளங்களுக்கு இந்த மார்க்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வற்றிருக்கின்றனர். இந்த நிலை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த அந்த சத்தியத் தோழர்களின் நிலைக்கு முற்றிலும் மாற்றமானது. அவர்கள் எந்தக் கணம் இஸ்லாத்திற்குள் நுழைந்தார்களோ, அதன் மறு நிமிடம், தான் அறிந்து கொண்ட இந்த இறைத்தூதை அறியாத மக்களுக்கு எடுத்துச் சென்று சொல்வதில் விரைந்து செயல்பட்டார்கள்.

உதாரணமாக, துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களைக் குறிப்பிடலாம். அவர் எந்தக் கணம் இஸ்லாத்திற்குள் நுழைந்தாரோ அடுத்த விநாடி, தன்னுடைய கோத்திரத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல விரைந்தார், தாமதிக்கவில்லை. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட புதிய நபர் தான். ஆனால் இன்றைக்கு பிறவி முஸ்லிம்களாக இருந்து கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி அடுத்த மக்களுக்கு எடுத்துரைப்பதில் அலட்சியமாக இருந்து கொண்டிருக்கும் நம் மக்கள் போல அவர் இருக்கவில்லை. மாறாக, தான் எந்த சத்தியத்தை சத்தியம் என்று ஏற்றுக் கொண்டாரோ, அதன் மறுவிநாடி, தான் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, இந்த அழைப்பை செவி மடுக்கவியலாமல் இருக்கும் தன்னுடைய குலத்தவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும், இந்த மார்க்கத்தை அவர்களிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற ஆவலில், அது தன் மீது இறைவன் சுமத்திய கடமை என்பதையும் உணர்ந்து அதனை நிறைவேற்ற விரைந்து சென்றதைப் பார்க்க முடிகின்றது.

இன்னும் இறைத்தோழர்கள் எப்பொழுது எந்தக் கணம் இஸ்லாத்தை சத்திய மார்க்கம் என ஏற்றுக் கொண்டார்களோ, அப்பொழுதே இறைநிராகரிப்பாளர்களுக்கும் தங்களுக்குமிடையில் தெளிவானதொரு வரையறையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

துமாமா பின் ஜன்தல் (ரலி) அவர்கள் யமாமா பகுதியின் சிற்றரசராக இருந்தார்கள், அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைது செய்து மதீனத்துப் பள்ளியில் கட்டி வைத்திருந்த சமயம், துமாமாவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று மூன்று நாட்களாக அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து வைத்தார்கள். மூன்றாவது நாள், அவரது கட்டுக்களை அவிழ்த்து விடச் சொல்லி அவரை விடுதலை செய்த பொழுது, எந்த நிர்ப்பந்தமும் இன்றி அவராகவே பக்கத்தில் இருந்த தோட்டத்திற்குச் சென்று குளித்து விட்டு வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட துமாமா (ரலி) அவர்கள், உம்ரா செய்யும் நிமித்தமாக மக்காவிற்குச் சென்ற பொழுது, அங்கிருந்த குறைஷிகளைப் பார்த்துச் சொன்னார்கள், குறைஷிகளே! நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள்! (இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில்) இறைத்தூதர் (ஸல்) அவர்களது அனுமதி இல்லாமல், யமாமா பகுதியிலிருந்து ஒரு மணிக் கோதுமை கூட உங்களை வந்து சேராது. (புகாரீ, ஃபத்ஹுல் பாரி 8ஃ78).

துமாமா (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பு, அவர்களுக்கிருந்த ஈமானின் வேகத்தை நமக்கு உணர்த்துவதோடு, இஸ்லாத்திற்கெதிரான சக்திகளை வலுவிழக்கச் செய்வதற்காக தன்னுடைய அதிகார பலத்தைப் பிரயோகித்து, அவர்கள் மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி, அதன் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு தன்னுடைய வளங்களைப் பயன்படுத்திய அவர்களது ஈமானிய வேகத்தைப் பார்க்க முடிகின்றது.

இன்னும் இன்றைய காலகட்டம் முஸ்லிம்களை அச்சுறுத்தல்கள் மூலமும் அடக்குமுறைகள் மூலம் ஈமானை விட்டும், இஸ்லாத்தை விட்டும் வெகு தூரம் அவர்களை அப்புறப்படுத்தக் கூடிய முயற்சிகளை இஸ்லாத்தின் எதிரிகள் செய்து வருகின்றார்கள்.

திடீர் இழப்புகள், அச்சம், பயம் ஆகியவைகள் திடீரென முஸ்லிம்களை சுற்றிச் சுழற்றும் பொழுது, இஸ்லாம் இதற்கு என்ன மருத்துவத்தை வைத்திருக்கின்றது என்று ஆராயமால், திருமறையிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் படிப்பினை பெறாமல், கண்கள் நிலை குத்தி நிற்கின்ற நிலையில் முஸ்லிம்கள் தங்களது ஈமானை இஸ்லாத்தை இழந்து விடக் கூடிய நிலையைப் பார்க்கின்றோம். அவர் தான் எதற்காக தன்னுடைய ஈமானை இழந்தேன் என்பதை, தனக்கேற்பட்ட பயத்தின் மூலம் அதனை நியாயப்படுத்த முனைகின்றார். அதேவேளையில் தனக்கேற்பட்ட அந்த சூழ்நிலைத் தாக்கத்தின் காரணமாக எழுந்த பிரச்னைகளை உறுதியான மனதுடன் அவர் எதிர்த்துப் போரடவில்லை. இவை அனைத்தும் அவருக்கு ஏற்பட்டு விட்ட ஈமானின் பலவீனத்தைத் தான் குறிக்கின்றது, இன்னும் அவரது ஈமான் உறுதியாக இறைவனுக்காகவே வாழ்கின்றோம், அவனிடமே நம்முடைய திரும்புதல் இருக்கின்றது என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வரவில்லை, இன்னும் அவரிடம் உண்மையிலேயே உறுதியான ஈமான் இருந்திருக்கும் என்றால், தனக்கேற்பட்ட அந்தச் சூழ்நிலையில் அவர் உறுதியான இறை நம்பிக்கையுடன் நேர்மையான முறையில் நடந்திருப்பார், வழி தவறியிருக்க மாட்டார். இஸ்லாத்தில் உறுதியாக இருந்திருப்பார்.

விவாதங்களும், எதிர்விவாதங்களும்

அதிகப்படியான வாக்குவாதங்கள் செய்வதனின்றும் வழிகாட்டப்பட்டவரைத் தவிர, மற்றவர்கள் நேர்வழியை தவற விட்டு விடுவார்கள் (முஸ்னத் அஹ்மத், 5ஃ252, ஸஹீஹ் அல் ஜாமிஈ 5633).

ஆதாரங்கள் இல்லாமல் அல்லது நல்ல நோக்கத்திற்காக அன்றி வாதப் பிரதிவாதங்கள் செய்வது ஒருவரை நேர்வழியினின்றும் அவரை தடம் புறழச் செய்து விடும். இன்றைக்குப் பலர் கல்வி ஞானமே இல்லாமல் அல்லது ஆதாரங்களாக புத்தகங்கள் அல்லது அறிஞர்களின் வழிகாட்டுதல்கள் அல்லது குர்ஆன் அல்லது சுன்னா ஆகிய எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் வாதப் பிரதிவாதங்களில் இறங்கி விடுகின்றார்கள். இத்தகைய விவாதங்களிலிருந்து ஒரு முஸ்லிம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (Reported by Ahmad in al-Musnad, 5/252; Saheeh al-Jaami’, 5633).
தன் மீது நியாயம் இருந்த போதிலும் யார் (தேவையற்ற) விவாதங்களிலிருந்து விலகிக் கொள்கின்றாரோ அவர்களுக்கு, சொர்க்கத்தின் ஒரு பகுதியில் அவர்களுக்காக ஒரு வீடு ஒன்றைக் கட்டித் தருவதற்கு நான் உறுதியளிக்கின்றேன். (அபூதாவூது, ஸஹீஹ் அல் ஜாமிஈ 1464).

உலக வாழ்வும் அதன் சுகங்களும் நிரந்தரம்

இந்த உலகமே கதி, அதன் சுகங்கள் தான் நிலைத்தவை என்று அதன் சுகபோகங்களில் மூழ்கி விட்டவர்கள், அந்த சுக போகத்தைப் பங்கு போட யாராவது ஒருவர் வந்து விட்டாலும் அல்லது அவரது பொருளாதாரம், அதிகாரம், ஆட்சி, வீடு போன்றவற்றில் ஏதாவது இழப்புகள் ஏற்பட்டால் அதிகப்படியான வலியை அதன் காரணமாக உணர ஆரம்பித்து விடுவார்.

பிறர் பெற்றுக் கொண்டிருப்பதை என்னால் அடைந்து கொள்ள முடியவில்லையே என்றும், என்னை இறைவன் ஒரவஞ்சனையாக நடத்துகின்றான் என்றும் புலம்ப ஆரம்பித்து விடுவார். தன்னுடைய இஸ்லாமிய சகோதரர் ஒருவர் பெற்றிருக்கக் கூடிய இறைவனின் அந்த அருட்கொடைகள் தன்னிடம் இல்லையே என்று அவர் புலம்புவது மட்டுமல்ல, தன்னிடம் இல்லாதது அவரிடம் எப்படி இருக்க முடியும் என்ற பொறாமையின் காரணமாக, தன்னிடம் இல்லாதது அவரிடம் இருக்கக் கூடாது, அவருக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய அந்த அருட்கொடைகள் அவரை விட்டும் அகன்று சென்று விட வேண்டும் என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்.

இத்தகைய பொறாமைக் கண் கொண்ட இதயங்கள் ஈமான் நிரம்பப் பெற்ற இதயங்களல்ல. இது இறை விசுவாசத்திற்கு எதிரானது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உண்மையான இறை அடியானிடம் ஈமானும் (இறைநம்பிக்கையும்) பொறாமையும் இரண்டும் ஒரே இடத்தில் அவனது இதயத்தில் இருக்க முடியாது. (அபூதாவூது, 5ஃ150, ஸஹீஹ் அல் ஜாமீஈ 1464).

அவன் எதனை நினைத்தாலும் இன்னும் பேசினாலும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களுக்கு முரணாகத்தான் பேசுவான், இன்னும் இறைநம்பிக்கையாளர்களை விட்டும் வித்தியாசமான முறையில் தான் அவனது செயல்பாடுகளும் அமைந்திருக்கும். இன்னும் குர்ஆனில் அல்லது சுன்னாவில் குறிப்பிட்டுள்ளபடியோ அல்லது நல்லடியார்களின் வாழ்க்கையின் மாதிரிகள் அல்லது அதன் சாயல்கள் கூட அவனது வாழ்வில் காணப்படாது.

சுயநலம்

ஒருவன் தன்னுடைய உணவு, குடிப்பு, உடை, வீடு, மற்றும் வாகனங்களுக்காக அதிகப்படியாகச் செலவு செய்வது மற்றும் அதன் ஆடம்பரத்தை விரும்புவதும் ஒருவனது ஈமானின் பலவீனத்தை ஏற்படுத்தும்.

இன்றைக்கு முஸ்லிம் உம்மத்தானது கடுமையான தேவைகளுக்கிடையே இருந்து கொண்டிருக்கும் பொழுது, தங்களது வாழ்க்கைக்குத் தேவையானவற்றில் மட்டும் அதிகப்படியான கவனம் செலுத்தி, ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும், இன்னும் அந்த சொகுசு வாழ்க்கைக்கு உரியவற்றைப் பெற்றுக் கொள்ள தன்னுடைய செல்வத்தை கணக்கில்லாது செலவழிக்கக் கூடிய நிலையையும், தேவையற்ற ஆடம்பரங்களுக்காக பணத்தை வாறி இரைக்கக் கூடிய நிலையையும் நம்முடைய சமுதாய மக்களிடம் கண்டு வருகின்றோம். இத்தகைய சொகுசு வாழ்க்கையானது ஒரு முஸ்லிமிற்குத் தடை செய்யப்பட்டது என்பதைக் கீழ்க்காணும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன் மொழி நமக்கு எச்சரிக்கின்றது :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை எமனுக்கு அனுப்பி வைக்கும் பொழுது, இவ்வாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள் : ஆடம்பரங்களிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள், அல்லாஹ்வின் அடிமைகள் ஆடம்பர வாழ்வு வாழ மாட்டார்கள். (சுநிழசவநன டில யுடிர யே'நநஅ in யட-ர்டைலயாஇ 5ஃ155; ளுடைளடையவ யட-ளுயாநநாயாஇ 353. யு ளiஅடையச எநசளழைn றயள யடளழ சநிழசவநன டில யுhஅயன in யட-ஆரளயெனஇ 5ஃ243).

பலவீன ஈமானை உருவாக்கும் காரணிகள்

ஈமானைப் பலவீனப்படுத்தக் கூடிய காரணிகள் பல இருக்கின்றன. சிலரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படும், இன்னும் சிலரிடம் பாவங்கள் செய்வதன் மூலமும் அல்லது இந்த உலகமே சதா என்று மூழ்கி விட்ட அவர்களது செயல்பாடுகள் மூலமும் அதனை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

ஈமானை அதிகரிக்கச் செய்யும் அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகளை விட்டு விட்டு அதிக காலம் விலிகியிருப்பது கூட ஈமானை பலமிழக்கச் செய்யும். இதனை திருமறையின் மூலம் இறைவன் நமக்குத் தெளிவாக்கியும் இருக்கின்றான். இறைவன் கூறுகின்றான் :

ஈமான் கொண்டோர்களே! அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகி விட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன. அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர். (57:16)

ஆம்! இறைநம்பிக்கையைக் கிளர்ந்தெழச் செய்கின்ற சூழ்நிலைகளை விட்டு விட்டு ஒதுங்கி விடக் கூடிய முஸ்லிம்களின் இறைநம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து, இறுதியில் ஈமானை வலுவிழக்கச் செய்து விடும்.

உதாரணமாக, ஒரு முஸ்லிம் தன்னுடைய முஸ்லிம் சகோதரர்களை விட்டு வெகு தூரம் பயணம் அல்லது வேலை நிமித்தம் பிரிந்து சென்று விடுவானாகில், ஈமானிய வாடையே இல்லாத அவனது அந்தப் புதிய சூழ்நிலையானது அவனது ஈமானை பலமிழக்கச் செய்து விடும். ஏனெனில் அவன் வாழுகின்ற அந்தப் புதிய சூழல், அவன் இதற்கு முன் வாழ்ந்த இஸ்லாமியச் சூழ்நிலையை விட மாறுபட்டதாகும். அவன் தனித்திருக்கும் போது பலமிழந்து விடக் கூடிய ஈமான், அவனது இஸ்லாமிய சகோதரர்களுடன் இருக்கும் போது உறுதியாக இருக்கும்.

ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :

நம்முடைய (இஸ்லாமிய) சகோதரர்கள் நம்முடைய குடும்பத்தவர்களை விட நெருக்கமானவர்கள். நம்முடைய குடும்பத்தவர்கள் இந்த உலகத்தைத் தான் நமக்கு நினைவுபடுத்துவார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்களோ மறுமையை நினைவுபடுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

இத்தகைய சகோதரர்களை விட்டு விட்டு வெகுதூரம் சென்று விடுவது, அதன் பிரிவானது ஈமானின் பலவீனத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். காலப்போக்கில் இந்த பலவீனம் இதயத்தில் குடி கொள்ள ஆரம்பித்து விட்டால் அது இதயத்தை கடினமாக்கி விடுவதோடு, அவனை அறியாமை என்னும் இருளில் கொண்டு போய்ச் சேர்த்து, அவனது முழு ஈமானை பலத்தையும் அணைத்து விடும். இத்தகைய நிலையை நாம் அடிக்கடி மக்களிடம் கண்டு வருகின்றோம். இஸ்லாமிய சூழ்நிலைகளை விட்டு விட்டு வேலை நிமித்தம் அல்லது கல்வி அல்லது விடுமுறையைக் கழிப்பதற்காக அயல் தேசங்களுக்குச் செல்லக் கூடியவர்களிடம் இந்த மாறுதல்கள் ஏற்பட்டு விடுவதை நாம் எளிதில் காண முடியும்.

நேர்வழி பெற்ற தலைமையிடமிருந்து பிரிந்திருப்பது

நேர்வழி பெற்ற தலைமைத்துவத்துடன் இருக்கும் பொழுது, அத்தகைய தலைமையிடமிருந்து இஸ்லாமியக் கல்வி, ஒழுக்கம், பண்பாடுகள் போன்றவற்றை அவர் கற்றுக் கொண்டு, அதன் மூலம் தன்னுடைய ஈமானை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இன்னும் அந்தத் தலைவர் தனக்குக் கீழ் இருக்கும் மாணவர்களுக்கு நல்ல அறிவு ஞானத்தை வழங்குவதோடு இன்னும் தன்னுடைய அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், இவரை வழி கேட்டிலிருந்து பாதுகாக்கக் கூடியவராக இருப்பார். இத்தகைய தலைமையிடமிருந்து ஒருவர் தனியே பிரிந்து விடுவாராகில், குறுகிய காலத்திலேயே அவரது ஈமானது வேகத்தை இழக்க ஆரம்பித்து, இறுதியில் அவரது இருதயம் கூட இருகிப் போய் விடக் கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார். எனவே தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்ட குறுகிய காலத்திலேயே அவருடன் வாழ்ந்த அந்த உத்தம தோழர்கள், தங்களது இதயத்திலே ஏதோ ஒரு மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து விட்டதைப் போல உணர ஆரம்பித்தார்கள். ஏனெனில், அவர்கள் இழந்திருப்பது சரியான தலைமையும், இன்னும் முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்ததொரு தங்களது ஆசிரியரையும், உதாரண புருஷரையும் அவர்கள் இழந்திருந்தது தான் அதன் காரணமாகும்.

அன்றைக்கு தங்களுடைய வழிகாட்டியை இழந்த அந்தத் தோழர்கள் குளிர்கால மழையில் நனைந்த ஆடுகளைப் போல செயலிழந்து நின்றதாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. இருப்பினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தை வெறுமனே விட்டு விட்டுப் போகவில்லை. மாறாக, சிறந்த தலைமைகளை உருவாக்கி விட்டுச் சென்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நிழலில் பயிற்சி பெற்ற அந்தத் தலைவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை ஏற்று, அவற்றை செவ்வனே செய்யக் கூடிய தகுதிகளையும், ஆற்றலையும் வாய்க்கப் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு அத்தகைய தலைமைகள், முன்னுதாரணமிக்க தலைமைகளின் தேவைகள் இருந்தும், அத்ததைகய தலைமைத்துவப் பண்புகளைப் பெற்றவர்கள் இல்லாததன் காரணமாக இஸ்லாமிய உம்மத் மிகவும் கைசேதமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

நேர்வழி பெற்ற முன்னோர்களிடமிருந்து அறிவு ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்யாதிருப்பது :

இன்றைக்கு நம்முடைய ஈமானைப் பலப்படுத்தக் கூடிய அளவில் ஏராளமான நேர்வழி பெற்ற உலமாப் பெருமக்கள் எழுதிக் குவித்திருக்கும் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், குர்ஆன் தெளிவுரைகள், விளக்கவுரைகள், இஸ்லாமியக் கொள்கைக் கோட்பாடுகளை (அகீதாவை)ச் சுமந்திருக்கும் ஏடுகள், இறைத்தூதர்(ஸல்) அவர்களது பொன் மொழிகள் அதற்கான விளக்கவுரைகள், இன்னும் ஒவ்வொரு பிரச்னைகள் சம்பந்தமான இஸ்லாமிய தீர்வுகள் என்று ஏராளமான நூல்களும், குறிப்பாக இமாம் இப்னுல் கைய்யிம், இமாம் ரஜப் மற்றும் இமாம் இப்னு தைமிய்யா போன்றோரின் கல்வி ஏடுகள் இன்று மலை போல் குவிந்திருக்கின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நூல்கள் யாவும் இஸ்லாமியனின் இதயத்தில் படிந்திருக்கும் ஜாஹிலிய்யா என்ற இஸ்லாமியத்திற்கு எதிரான அழுக்குகளைக் களைந்து அவனது இதயத்தைத் தூசி தட்டி, ஈமானிய வேகத்தை உசுப்பி விடக் கூடிய நூல்களாக இருந்து கொண்டிருக்கின்றன. கடினமாகி விட்ட இதயத்தை இலேசாக மாற்றி விடக் கூடியவைகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த நூல்களை விட்டு விட்டு, ஆதாரங்களில்லாமல் தொகுக்கப்பட்டிருக்கும் ஃபிக்ஹு சம்பந்தமான நூல்கள், இலக்கண நூல்கள், உசூல் என்று சொல்லக் கூடிய அகீதாவின் அடிப்படைகள் போன்றவற்றின் மீது அதிகக் கவனம் செலுத்துவது, ஒருவரது இதயத்தை இறுகச் செய்து விடும். குர்ஆனின் விளக்கவுரைகள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகள் - ஹதீஸ்கள் ஆகியவற்றை விட்டு விட்டு, இல்லை அவற்றை எப்பொழுதாவது எடுத்துப் பார்த்துக் கொள்வதானது, ஒருவரது இதயத்தின் ஈமானிய வேகத்தை உசுப்பி விடக் கூடியதாக இருக்காது.

உதாரணமாக, புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூல்களைப் படிக்கக் கூடிய ஒருவர் நிச்சயமாக அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரைப் போல உணரக் கூடியவராக இருப்பார். இன்னும் அதில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் இறைத்தோழர்கள் வாழ்ந்த அந்தக் காலச் சூழல்கள் மற்றும் நிகழ்வுகள் ஒருவரது ஈமானிய வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய இருக்கும்.

ஹதீஸ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தவர்கள், இன்னும் இன்றைக்கு அவர்கள் நம்முடன் இல்லையெனினும், அவர்களது வார்த்தைகள் நம்முடன் இருந்து கொண்டிருக்கின்றன.

இத்தைகய நூல்களை விட்டு விட்டு இலக்கியம், தத்துவம், சமூக அறிவியல் இன்னும் இதைப் போன்ற பல்வேறு துறை நூல்களை விரும்பிப் படிப்பவர்களுக்கும் இன்னும் இஸ்லாமிய நூல்களைப் படிப்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், இஸ்லாமிய தாக்கம் இல்லாத நூல்களைப் படிப்பவர்களிடம் காணப்படாத ஒழுக்கம், இஸ்லாமிய நூல்களை விரும்பிப்படிப்பவர்களிடம் அதிகம் காணப்படக் கூடியதாக இருக்கும். ஏனெனில், அவர் விரும்பிப் படிக்கக் கூடிய அந்த இஸ்லாமிய நூல்கள் மிகச் சரியாக ஒழுக்க விழுமியங்களை அவரிடம் ஏற்படுத்துவது தான் அதன் காரணமாகும். இத்தகைய ஒழுக்க விழுமங்கள் காதல் கதைகளையும், கற்பனைக் கதைகளையும், அன்றாடம் தினசரிகளில் வரக் கூடிய கட்டுக் கதைகளையும் படிப்பவர்களிடம் காணக் கூடியதாக இருக்காது.

பாவங்கள் மிகைத்திருக்கும் சூழ்நிலையில் வாழ்வது

ஒருவர் தனது சமீபத்திய சாதனைகளைப் பற்றி மிகைப்படுத்திக் கூறிக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் சமீபத்தில் வெளியான மிகப் பிரபலமான பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பார், அடுத்து இன்னுமொருவர் புகைத்துக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் சினிமா சம்பந்தப்பட்ட புத்தங்களை வாசித்துக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் இன்னொருவரைத் திட்டிக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் பிறரை வஞ்சித்துக் கொண்டிருப்பார், இப்படி ஏகப்பட்ட அவலங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலைகளில் வாழக் கூடியவரும், இன்னும் பேசினால் புறமும், கோள் சொல்லுதலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டும், இன்னும் கிரிக்கெட், கால்பந்து போட்டிகளின் முடிவுகள் எப்படி இருக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று புலம்பிக் கொண்டு பந்தயங்களைக் கட்டிக் கொண்டிருக்கக் கூடிய மக்களின் கூட்டத்தில் வாழக் கூடிய ஒருவருக்கு எப்படி ஈமானின் வேகம் அதிகரிக்கும்.

இத்ததைகய சூழ்நிலையில் வாழக் கூடிய ஒருவருக்கு இந்த உலக வாழ்க்கையின் அம்சங்கள் தான் ஞாபகம் வருமே ஒழிய, இறைநம்பிக்கையும், இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளும் எவ்வாறு ஞாபகத்;திற்கு வரும்?!

இன்றைக்கு நாம் வாழக் கூடிய சூழ்நிலைகள் இவ்வாறு தான் இருந்து கொண்டிருக்கின்றன. இருவர் சந்தித்து விட்டால் வியாபாரம், வேலை, பணம், முதலீடு, வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சம்பள உயர்வு, சம்பள வெட்டு, பதவி உயர்வு, திட்டங்கள் போன்றவற்றைப் பற்றித்தான் அதிகம் பேசக் கூடியவர்களாகவும், அவர்களது சம்பாஷனைகள் யாவும் இதனைச் சுற்றியே தான் அமைந்திருக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.

இன்றைய முஸ்லிம்களின் வீடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்றால் - ஷைத்தானிய சக்திகளின் பிடியில் தான் இன்றைய முஸ்லிம்களின் வீடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அசிங்கமான பாடல்கள் ஒலிக்கக் கூடிய இல்லங்களாகவும், இன்னும் வக்கிரமான சினிமாப் படங்கள், ஆணும் பெண்ணும் கலந்துறவாடும் காட்சிகளைக் கொண்ட படங்கள், பாடல்கள் கொண்ட சினிமாப் படங்களும் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் அகப்பட்டு விடக் கூடிய முஸ்லிம்களின் இல்லங்களில் எவ்வாறு இஸ்லாமியத் தாக்கம் இருக்கும். மாறாக, ஈமானை இழந்து விட்ட, ஷைத்தானின் பிடியில் சிக்கிச் சீரழியக் கூடிய, மனநோய் கொண்ட சமுதாயமாகத் தான் அது இருக்கும்.

இந்த உலகமே கதி என்று வாழக் கூடிய ஒருவனது இதயம், இந்த உலகத்திற்கும் இந்த உலகத்தின் ஆதாயங்களுக்கும் அடிமைப்பட்டதாகத் தான் இருக்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தினாரின் அடிமைகள் மற்றும் திர்ஹத்தின் அடிமைகள், (இவர்களுக்கு) அவனுக்கு அழிவுதான். (புகாரீ, 2730).

இந்த உலகத்தில் வாழக் கூடிய உங்களுக்குத் தேவையானதெல்லாம், ஒரு பயணிக்குத் தேவைப்படுவது தான். (தபராணீ - அல் கபீர், 4ஃ78, ஸஹீஹ் ஜாமீஈ 2384) - இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு வழிப்போக்கன் - அவன் சென்றடைய இருக்கும் இருப்பிடத்தை அடைந்து கொள்வதற்குக் குறைந்த அளவு பொருள்களே, அவனது பயணத்திற்கு போதுமானதாக இருக்கும்.

இந்த உலக வாழ்க்கைக்கு குறைந்த அளவு வளங்களே போதுமானதாக இருப்பினும், இந்த மனிதன் இந்த உலக வாழ்வே கதி என்று எண்ணம் கொண்டதன் காரணமாக, அவன் எப்பொழுதும் மார்க்கெட், ஷேர், உற்பத்தி, வியாபாரம் என்று ஓடி ஓடித் திரிகின்ற அவலத்தை நாம் கண்டு வருகின்றோம். இது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்றை மெய்;ப்பிப்பதாக உள்ளது.

மனிதன் இறைவனை வணங்குவதற்காகவும் இன்னும் ஸகாத் வழங்குவதற்காகவும் தான் நாம் வளங்களை இறக்கி வைத்தோம், ஆனால் ஆதத்தினுடைய மகன் ஒரு சமவெளியைப் பெற்றிருந்தால், அவன் தனக்கு (இதைப் போல)இன்னொன்று இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான், இன்னும் அவனுக்கு இரண்டு சமவெளிகள் இருந்தால் மூன்றாவதாக ஒன்று நமக்கு இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான். ஆதத்தினுடைய மகனது வயிற்றில் மண் தான் நிறைந்திருக்கின்றது (அதாவது அவன் என்றைக்கும் திருப்தி அடையவே மாட்டான்), இன்னும் யார் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டார்களோ அவர்களது பாவத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். (அஹ்மது 5ஃ219, ஸஹீஹ் அல் ஜாமிஈ 1781).

செல்வமும், மனைவி மக்களும்

''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு'' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்;ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சடப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (3:14)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் வருகின்ற இந்த உலகத் தேவைகளான மனைவி மக்கள் செல்வங்கள் ஆகிய யாவும், இறைவனின் மீதுள்ள அன்பைக் காட்டிலும் மிகைத்து விடக் கூடிய அளவில் சென்று விடக் கூடாது. அவ்வாறு செல்லும் பொழுது தான் இறைவனுக்குக் கீழ்படியாமையை அது உருவாக்கி விடுகின்றது. அவ்வாறில்லாமல், இஸ்லாமியச் சட்டங்களின் வரையறைக்குள், இன்னும் இறைவனுக்குக் கீழ்படிகின்ற தன்மையிலிருந்து அவனை வழி தவறச் செய்யாத விதத்தில் அமைந்து விடுமானால், இத்தகைய செல்வங்களும், உறவுகளும் அவனுக்கு மிகப் பயன்தரக் கூடியதாக அமைந்து விடும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இந்த உலகத்தில் பெண்களும், நறுமணங்களும் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தும் கூட, இவை அனைத்தைக் காட்டிலும் தொழுகை தான் எனக்கு மிக மிக விருப்பமானதாக இருக்கின்றது. (அஹ்மது 3ஃ128, ஸஹீஹ் ஜாமிஈ 3124)

அநேக ஆண்கள் தங்களது மனைவிமார்களின் விருப்பங்களைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும், அந்த விருப்பங்கள் ஹராமான வழியில் இருந்தாலும் அவற்றைத் தடுக்க இயலாமலும், தங்களது குழந்தைகளை தொழுகை போன்ற இறைவணக்கங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டாமல், அவர்களை பள்ளிவாசல் பக்கமே ஒதுங்கவியலாத அளவுக்கு வளர்க்கின்ற பழக்கத்தையும் நாம் கண்டு வருகின்றோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அச்சத்திற்கும், கபடத்திற்கும், ஏமாற்றத்திற்கும் இன்னும் கஞ்சத்தனத்திற்கும் காரணமாக உங்களது குழந்தைகள் உங்களை ஆளாக்கி விடுவார்கள். (தபராணி - அல் கபீர் 24ஃ241, ஸஹீஹ் அல் ஜாமீஈ 1990).

கஞ்சத்தனம் என்பது என்னவென்றால், இவன் அல்லாஹ்வினுடைய பாதையில் ஒரு பொருளைச் செலவு செய்ய எண்ணியிருப்பான். அப்பொழுது ஷைத்தான் குறுக்கிட்டு அல்லாஹ்வின் பாதையில் இந்தப் பொருளை நீ செலவழித்து விட்டால், உன்னுடைய குழந்தைகளின் கதி என்னாவது என்பதை நினைவூட்டுவதன் மூலம், அந்தப் பொருளை இறைவனுடைய பாதையில் செலவழிக்க இயலாதவானாக அந்த மனிதனை ஆக்கி விடுகின்றான்.

நயவஞ்சகத்தனம் என்பது என்னவென்றால், ஒரு மனிதன் இறைவனது பாதையில் ஜிஹாத் செய்வதற்கு விரும்புகின்றான். ஆனால் ஷைத்தான் அவனிடம் வந்து நீ அல்லாஹ்வின் பாதையில் சென்று போர் புரியச் சென்று கொல்லப்பட்டு விட்டால், உனது குழந்தைகள் அநாதைகளாகி விடும் அல்லவா? என்று அவனை அச்சமுறச் செய்யும் பொழுது, அந்த நயவஞ்சகத்தனம் காரணமாக போருக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து விடக் கூடியவனாக மாறி விடுவான்.

அறியாமை என்பது என்னவென்றால், இவன் உலமாக்களின் உரைகள் மற்றும் கல்வியைத் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக முயற்சி செய்யும் பொழுது, குழந்தைகள் குறுக்கிட்டு அறிவைத் தேடிச் செல்வதனின்றும் இவனைத் தடுக்கக் கூடியதாக இருந்து விட்டால், அதுவே அவனது அறியாமையைக் காரணமாகி விடும்.

கவலை என்பது என்னவென்றால், அவன் செல்லமாகப் போற்றி வளர்க்கக் கூடிய அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டு விட்டால் அதற்காகக் கவலை கொள்ளக் கூடியவனாகவும், இன்னும் தன்னுடைய குழந்தை பிரியப்பட்டு ஒரு பொருளைக் கேட்கும் பொழுது அதனை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றால், அதற்காகக் கவலைப்படக் கூடியவனாகவும் மனிதன் மாறி விடுகின்றான். இன்னும் தான் வளர்த்த அந்தக் குழந்தை பெரியவானாக ஆகி விட்டதும், தன்னைப் பராமரிக்காமல் விட்டு விட்டால், தான் கஷ்டப்பட்டு அவனை எவ்வாறெல்லாம் வளர்த்தோம், இந்த வயதான காலத்தில் நம்மை இப்படி வெறுமனே தவிக்க விட்டு விட்டுச் சென்று விட்டானே என்று புலம்பக் கூடிய நிலைக்கு விட்டு விடக் கூடியவனாகவும் அவன் மாறி விடுகின்றான்.

மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டு, திருமணமே செய்து கொள்ளாமல், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்பதல்ல, மாறாக, செல்வங்களும், மனைவி மக்களும் இறைவனது நினைவை விட்டும் ஒருவனை மாற்றி விடக் கூடிய விதத்தில் அமைந்து விடக் கூடாது என்பதும், மனைவி மக்கள் அந்த மனிதனை ஹராமான வழியில் அவர்களின் நலன்களுக்காக பொருளீட்டத் தூண்டுகோளாக அமைந்து விடக் கூடாது என்பதே இதன் கருத்தாகும்.

செல்வங்கள் மனிதனை எவ்வாறெல்லாம் நிலைமாறச் செய்யும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

ஒவ்வொரு உம்மத்திற்கும் ஒவ்வொரு ஃபித்னாக்கள் (குழப்பங்கள், கோளாறுகள்) உண்டு. என்னுடைய உம்மத்தைப் பொறுத்தவரை செல்வம் தான் அந்த ஃபித்னவாக இருக்கும். (திர்மிதி 2336, ஸஹீஹ் ஜாமிஈ 2148)

செல்வத்தை அதிகம் சேகரிக்க வேண்டும் என்ற ஆசையானது, ஆட்டிற்கு பக்கத்தில் இருக்கக் கூடிய ஓநாய் எவ்வாறு ஆட்டை வெகு சீக்கிரத்தில் கபளீகரம் செய்து விடுமோ, அதைப் போல செல்வத்தின் மீதுள்ள ஆசை ஒருவனது மார்க்கத்தையே அழித்து விடும். இதைத்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டிருக்கின்ற ஒருவனது பொருளாசையானது, இரண்டு பசி கொண்ட ஓநாயிடம் அகப்பட்ட ஆட்டிற்கு நேரக் கூடிய பாதிப்பை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். (திர்மிதி 2376, ஸஹீஹ் அல் ஜாமிஈ 5620)

எனவே தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களது தேவைகளுக்கு எவ்வளவு போதுமானதாக இருக்குமோ அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள், தேவைக்கு மிஞ்சக் கூடிவைகள் இறைவனது நினைவை விட்டும் உங்களை பராக்காக்கி விடும்.

எனவே தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

உங்களது தேவைகளுக்கு எவ்வளவு போதுமானதாக இருக்குமோ அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள், தேவைக்கு மிஞ்சக் கூடிவைகள் இறைவனது நினைவை விட்டும் உங்களை பராக்காக்கி விடும்.

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறைவனுடைய பாதையில் செல்லக் கூடிய ஒருவனுக்கு, அவனது பயணத்தேவைக்குரிய பொருள்களே போதுமானது. (அஹ்மது 5ஃ290, ஸஹீஹ் அல் ஜாமிஈ 2386).

தான தர்மம் செய்யாமல், பணத்தைச் சேகரித்து வைப்போரை இறைத்தூதர் (ஸல்) எச்சரித்திருக்கின்றார்கள்.

என்னுடைய செல்வம் இங்கிருக்கின்றது, இங்கிருக்கின்றது. இங்கிருக்கின்றது என்று கூறி, தனக்கு முன்னாலும், பின்னாலும், வலப்புறமும், இடப்புறமும் (தான தர்மங்களுக்காக) செல்வத்தை வாறி வழங்குகின்றாரே அத்தகையவரைத் தவிர, செல்வத்தைச் சேகரித்து வைக்கின்றார்களே அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். (இப்னு மாஜா 4129, ஸஹீஹ் அல் ஜாமிஈ 7137).

உலகமே கதி

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன் (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (15:03)

அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் உங்கள் மன இச்சையைப் பின்பற்றுவது குறித்து நான் பயப்படுகின்றேன் இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும், மன இச்சையைப் பின்பற்றுவதும் சத்தியத்தை மறக்கச் செய்து விடும், இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையானது மறுமையை மறக்கச் செய்து விடும். (ஃபத்ஹுல் பாரி 11ஃ236)

இன்னுமொரு அறிவிப்பில் :

நான்கு விஷயங்கள் அழிவைக் கொண்டு வருபவையாக இருக்கின்றன, வறண்டு போன கண்கள் (கண்ணீர் சிந்தாத கண்கள்), இறுகிப் போன இதயம், நீண்ட நாள் வாழ ஆசை கொள்வதும் இன்னும் இந்த உலகப் பொருள்களின் மீது ஆசை கொள்வதும்.

அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையானது இறைவனுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளில் சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும், இன்னும் கால தாமதத்தையும், உலக ஆசைகளையும், மறுமையை மறுத்து மறந்து வாழ்வதையும், இன்னும் இதயத்தை இறுகச் செய்து விடும், ஏனெனில் இளகிய இதயம் தான் மறுமையைப் பற்றி நினைக்கக் கூடியதாக இருக்கும், மரணத்தைப் பற்றி நினைத்து அழக் கூடியதாகவும், மண்ணறை வாழ்வு குறித்தும், அதன் வெகுமதிகள் மற்றும் தண்டனை குறித்தும், நீதித் தீர்ப்பு நாளில் நிகழவிருக்கின்ற அமளிகள் குறித்தும் அது சதா நினைத்துக் கொண்டே இருக்கும். இதனை அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு விளக்குகின்றான் :

(ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன ..(57:16)

யார் இந்த உலகத்தில் அதிக நாள் நாம் வாழ வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருக்கவில்லையோ அவரது இதயம் ஒளியினால் நிரப்பப்பட்டிருக்கும், ஏனென்றால் அவரது இதயம் எப்பொழுதும் மரணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால், இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதில் மிகவும் உறுதியுடயவராக இருப்பார். (ஃபத்ஹுல் பாரி 11ஃ237)

ஒருவரது ஈமானின் உறுதியை இழக்கக் செய்யக் கூடிய இன்னுமொரு அம்சம் என்னவென்றால், அதிகமாக உண்பது, இரவில் மிக நீண்ட நேரம் விழித்திருப்பது, அதிகமாகப் பேசுவது மற்றும் அதிகமான நேரங்களை மற்றவர்களுடன் கூடியிருந்து (அரட்டைகளில்) கழிப்பது.

யார் அதிகமாக உண்கிறார்களோ அவர்களது மூளை மிகவும் மெதுவாகவே வேலை செய்யும், உடம்பு பெருத்து விடும், இத்தகைய தன்மைகள் இறைவனை நினைவு கூர்வது மற்றும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனத்தை உண்டாக்கி விடுவதோடு, இத்தகைய நபர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில் ஷைத்தானுக்கு மிக எளிதாகவும் இருக்கும்.

எவரொருவர் அதிகமாக உண்கிறாரோ, குடிக்கின்றாரோ இன்னும் தூங்குகின்றாரோ அத்தகையவர்கள் இறைவனது வெகுமதியை இழந்து விடுகிறார்கள்.

அதிகமாகப் பேசுவது இதயத்தை இறுகச் செய்து விடுகின்றது, அதிகமான மக்களுடன் வீணாகத் தன்னுடைய நேரங்களைக் கழிப்பவர்களுக்கு தனியாக இருந்து தன்னுடைய நிலைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் கிடைக்காது.

அதிகமாகச் சிரிப்பது ஒருவனது இதயத்தின் வாழ்நாளையை பாழடித்து விடும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகமாகச் சிரிக்காதீர்கள், அதிகமாகச் சிரிப்பது இதயத்தை மரணிக்கச் செய்து விடும். (இப்னு மாஜா 4193, ஸஹீஹ் அல் ஜாமிஈ)

ஒருவனது நேரங்கள் வணக்க வழிபாட்டுடன் கூடியதாக இறைவனுடைய ஞாபகத்தை அதிமதிகம் நினைவு கூரத்தக்க விதத்தில் கழியவில்லை என்றால், அவன் குர்ஆனை உதறித் தள்ளி விட்டுச் செல்லக் கூடியவனாகவும், இன்னும் இறைநம்பிக்கையாளர்களின் அறிவுரைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவும் மாட்டான்.

ஈமானைப் பலவீனப்படுத்தக் கூடிய அம்சங்கள் ஏராளமாக இருந்தும், இங்கே நாம் அவற்றில் சிலவற்றைத் தான் குறிப்பிட்டிருக்கின்றோம். இங்கே குறிப்பிடப்படாத சில அம்சங்கள் உங்களது வாழ்க்கையில் உங்களை பாதித்திருக்கலாம், அதனை நீங்கள் கூர்ந்து கவனிப்பதன் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

நமது இதயங்களை அல்லாஹ் சுத்தப்படுத்தி, கெட்ட செயல்பாடுகளிலிருந்து நம்மைக் காத்தருளப் பிரார்த்திப்போமாக! ஆமீன்!!

;ஈமானின் பலவீனத்தைச் சீர்செய்தல்

உங்கள் உடம்பிலிருந்து ஆடைகள் எவ்வாறு களையப்படுமோ, அதுபோல உங்களது இதயத்திலிருந்தும் இறைநம்பிக்கை - ஈமான் களைந்து விடும். எனவே, உங்கள் இதயத்தில் ஈமானைப் புதுப்பித்துக் கொள்ள (அடிக்கடி) இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் ஹாக்கிம், தபரானி)

ஒருவர் அணிந்திருக்கின்ற ஆடையானது அழுக்கடைகின்ற வரை அல்லது கிழிகின்ற வரை தான் அதனை அணிந்திருப்பார். அந்த எப்பொழுது தனக்கு ஒத்துவராது என்று நினைத்து விடுகின்ற மாத்திரத்திலேயே அதனை கழற்றி எறிந்து விடுவார். அது போலத் தான் இறைநம்பிக்கையும். எப்பொழுது இறைநம்பிக்கை பலவீனமடைந்து விடுகின்றதோ அல்லது இதயத்தில் பாவ மேகங்கள் சூழ ஆரம்பித்து விடுகின்றதோ, அப்பொழுது இறைநம்பிக்கை, இறையச்சம் போன்ற ஈமானியப் பண்புகள் அந்த நபரை விட்டும், இனி இங்கு நமக்கு வேலையில்லை என்று அவரை விட்டு அகன்று சென்று விடும். இதனைத் தான் மேற்கண்ட ஹதீஸின் மூலம் நமக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

நிலவை மேகங்கள் மறைத்துக் கொண்டிருப்பது போல, ஒவ்வொருவரது இதயமும் இவ்வாறான மேகங்களால் (தீமைகளால்) சூழப்படாமல் இல்லை. மேகங்கள் அடுக்கடுக்காக சூழச் சூழச் சூழ இருள் உடனே கவிழ்ந்து விடும், ஆனால் எப்பொழுது மேகங்கள் கலைந்து விடுகின்றதோ, அந்த நிலவு மீண்டும் பிரகாசமடைய ஆரம்பித்து விடும். (சில்சிலத்துல் ஸஹீஹ், 2268).

நிலவை மேகங்கள் மறைத்துக் கொண்டால், அந்த மறைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நிலவின் வெளிச்சத்தை அது தடுத்துக் கொண்டிருக்கும். அந்த மேகம் நிலவை விட்டும் விலகியதும், மீண்டும் வானத்தில் வெளிச்சம் பரவ ஆரம்பித்து விடும். அதனைப் போலவே, இறைநம்பிக்கையாளரின் இதயத்தில் அவ்வப்பொழுது, பாவ மேகங்கள் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்து விடும், அப்பொழுது அவர் தன்னை அவர் இறைநிராகரிப்பு என்ற பாவ இருளில் தான் சிக்கித் தவிப்பதை உணர்ந்து கொண்டாரென்றால், அவர் அந்த பாவ மேகங்களை அகற்றிக் கொள்வதற்கு இறைவனின் உதவியை கேட்டுப் பெற வேண்டும், இன்னும் இறைநம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்குண்டான அமல்களைச் செய்ய ஆரம்பித்து விட வேண்டும், அதன் மூலம் தன்னைச் சூழ உள்ள இருள் என்ற பாவத்தை அகற்றிக் கொண்டு, தனது இறைநம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ள இயலும். அவ்வாறு புதுப்பித்துக் கொண்டு விட்டால், முன்னைப் போலவே அவரது இதயம் பிரகாசிக்க ஆரம்பித்து விடும்.

இங்கே இறைநம்பிக்கை அல்லது ஈமானைப் பற்றிய முக்கியமான கொள்கை என்னவென்றால், ஒருவரது இறைநம்பிக்கை எப்பொழுதும் ஒரு தரத்தில் இருக்காது. அது அவ்வப்பொழுது கூடும் குறையும். குறையவும் செய்யலாம் அல்லது கூடவும் செய்யலாம் என்பது தான் சுன்னாவத் ஜமாஅத்தினரின் கொள்கையாகும். இறைநம்பிக்கை என்பது வெறும் வார்த்தைகளால் வடித்து விட்டுப் போகின்றதொரு அம்சமல்ல, இறைநம்பிக்கையை ஏற்றுக் கொண்டதொரு மனிதர், அதனைச் செயல் வடிவில் கொண்டு வரும் பொழுது தான், அவர் அதனை உறுதியாக நம்பிக் கொண்டிருக்கின்றார் என்று அர்த்தமாகும். மேலும் இறைநம்பிக்கை என்பது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிவதில் இருக்கின்றது, இறைநம்பிக்கை குறைவது என்பது கீழ்ப்படியாமையைக் குறிக்கும். இதற்கு குர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் நாம் பல ஆதாரங்களைக் காட்ட முடியும். உதாரணமாக,

அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; (48:4)

''இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?'' என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது. (9:124)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவராவது ஒரு பாவமான காரியத்தைக் கண்டால் அவர் தனது கையால் தடுக்கட்டும், இயலாது போனால் தனது நாவால் தடுக்கட்டும், இன்னும் அதுவும் இயலாது போனால், அவர் தனது மனதால் வெறுக்கட்டும், இது தான் ஈமானின் - இறைநம்பிக்கையின் இறுதி நிலை என்று கூறினார்கள். (புகாரீ, பத்ஹுல் பாரி 1ஃ51)

ஒருவரது இயத்தில் இறைநம்பிக்கை கூடுவதையும் இன்னும் குறைவதையும் நமது அன்றாட வாழ்வில் நாம் காணக் கூடிய நிதர்சனங்களாகும். ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்றார் என்றால், அங்கு முகத்தை மூடாது தனது அங்கங்கள் தெரியும்படி செல்லக் கூடிய பெண்களைக் காணும் போதும், இன்னும் வீண் அரட்டைகளில் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டிருக்கும் பொழுதும் ஒருவரது இறைநம்பிக்கை சற்று அவரை விட்டும் அகன்று சென்று விடுவதைக் காணுகிறோம். அதே மனிதர் சற்று தனது நேரத்தை மண்ணறையின் பக்கம் சென்று கழித்து விட்டு வருவாராகில், அவரது இதயம் முன்னைப் போல இருக்காது. மாறாக, மறுமைச் சிந்தனை மேலோங்கும், இறைபயம் அதிகரிக்கும், அதன் மூலம் அவரது இதயத்தில் படிந்திருக்கக் கூடிய அழுக்குகள் நீங்கும், மீண்டும் அவரது இதயம் புதுப் பொழிவு பெற்று விடும். இப்பொழுது, நமது அன்றாட வாழ்வில் சந்திக்கக் கூடிய இரண்டு நிகழ்வுகளில் நமது ஈமான் குறைவதையும், அடுத்த அனுபவத்தில் கூடுவதையும் நாம் அனுபவ ரீதியாகக் காண முடியும்.

இன்னும் மார்க்க அறிஞர்களின் அறிவுரை என்னவெனில், ஒருவர் தனது இறைநம்பிக்கை கூடுவதையும் இன்னும் ஷைத்தானின் தூண்டுதலால் குறைவதையும் கவனித்துக் கொண்டே வர வேண்டும். அவரது இறைநம்பிக்கை குறையும் பொழுது, அதிக கவனம் செலுத்தி அதனை அதிகரிப்பதற்குண்டான அமல்களைச் செய்ய முயற்சித்தல் வேண்டும். இன்னும் இறைநம்பிக்கை குறையும் பொழுது, நாம் இப்பொழுது ஷைத்தானின் பிடியில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர் பூரணமாக உணர்ந்து கொள்ளக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். (ளூயசா ழேழnலையா ஐடிn யட-ஞயலலiஅ டில ஐடிn 'நுநளயஇ 2ஃ140).

இங்கே நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைநம்பிக்கை குறைய ஆரம்பித்தால் என்ன நிகழும், மனிதனுள் அது எந்தவகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால், ஒருவன் மீதுள்ள கடமைகளையும் உதாசினப்படுத்தும் போக்கை நோக்கியும், விலக்கப்பட்ட அல்லது தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்யும் பொழுது இறைச்சிந்தனையற்ற நிலையை நோக்கியும் அவனைக் கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும், இந்த நிலையை ஒருவன் தன்னிடம் காண்பானாகில் அவன் உடனே இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவதோடு, அதனைக் களைவதற்குண்டான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இன்னும் கடமைகளை செய்வதற்குண்டான புறக்கணிப்பு அவனிடம் இல்லையெனினும், விரும்பத்தக்க காரியங்களைச் செய்வதில் பொடுபோக்குத் தன்மை காணப்படும். உதாரணமாக, தன்னை எவ்வாறு சரி செய்து கொள்வது அல்லது தன்னைத் தானே எவ்வாறு சீர்திருத்திக் கொள்வது என்பதைப் பற்றி அறிவைப் பெறுவதற்கான தேவை இருக்கின்றது, நம் மீது சுமத்தப்பட்ட கடமைகளையும் வணக்க வழிபாடுகளையும் செய்வதற்குண்டான சக்தியையும், பலத்தையும் நாம் சரியான அளவில் பெற்றுக் கொண்டு விட்டோமா என்பதை அவன் சரியாகக் கணிப்பீடு செய்வது வரை, அவனுக்கு மேற்கண்ட அறிவு தேவையானதாக இருக்கின்றது.

இந்த வகையில், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், 'ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் சக்தியும், பலமும் தேவையாக இருக்கின்றது, இன்னும் இந்த சக்திக்கும் பலத்திற்கும் பின்பு ஒரு ஓய்வு அல்லது இடைவெளி இருக்கின்றது. அந்த ஓய்வு அல்லது இடைவெளி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைப்படி அமைந்து விட்டது என்று சொன்னால், அவன் வெகுமதியைப் பெற்றுக் கொள்வான். இன்னும் யாருடைய ஓய்வு அல்லது இடைவெளி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அல்லாத வகைகளில் அமைந்து விடுமானால், அவன் நாசமாகி விடுவான். (அஹ்மத் 2-210 மற்றும் ஸஹீஹ் தர்ஹீப் 55)

இப்பொழுது நாம் இறைநம்பிக்கையில் ஏற்பட்டு விட்ட பலவீனத்தை எவ்வாறு சரி செய்வது என்ற ஆராய்ச்சிக்குள் புகு முன்பு நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பலர் வெளியிலிருந்து வரும் தீர்வுகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லாதவர்களாக, அவர்கள் இதயம் கடினமாக இருப்பதை உணர்வார்கள், பிறரிடம் இருந்து அவரது பலவீனத்திற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர் உணர வேண்டும், இன்னும் தாங்களால் சரி செய்து கொள்ள முடியும் எனில் அதனையும் முயற்சிப்பதில் தவறில்லை. ஏனெனில், இறைநம்பிக்கை என்பது அடியானுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும் உள்ள தொடர்பாகும். அதனை பிறர் வந்து சரி செய்வது என்பதைக் காட்டிலும், தானகவே சரி செய்து கொள்வது இன்னும் சிறப்பானது.

கீழே திருமறைக் குர்ஆனின் மூலமாக நாம் எவ்வாறு நமது பலவீனங்களைச் சரி செய்து கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். அவன் தனது அனைத்து பிரச்னைகளையும் இறைவனிடம் முறையீடு செய்து விட்டு, அதனைக் களைவதற்கு முழுமையாக அவனை மட்டுமே சார்ந்திருந்து, அதனைக் களைவதற்கு எடுக்கின்ற போராட்டங்களின் மூலம் நிச்சயமாக அவன் நினைத்த அந்த சாதனைக் கோட்டைத் தொட்டு விட முடியும். அதற்கான திருமறையின் வழிகாட்டுதலை இப்பொழுது காண்போம் :-

திருமறையின் விளக்கத்தை நாம் எடுத்துப் பார்த்தோமென்று சொன்னால், அதில் அவன் அனைத்திற்கும் விளக்கத்தை வைத்திருப்பதோடு, அவை யாவும் இருளிலிருந்து வெளிச்சம் எவ்வாறு பிகாசமாக இருக்குமோ அதனைப் போல, யார் அதனைப் பின்பற்றுகின்றார்களோ, அத்தகைய இறைவனுடைய அடியானுக்கு அது பிரகாசமிக்க விளக்காக வாழ்க்கைக்கும் மறுமைக்கு வழி காட்டக் கூடியதாக அமைந்து விடும். எனவே, இந்த ஒளியை – திருமறைக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களது உள்ளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய அந்த ஈமானின் - இறைநம்பிக்கையின் பலவீனத்தை அது அகற்றி விடக் கூடியதாக இருக்கும். இறைவன் தன்னுடைய திருமறையிலே இதனைப் பற்றிக் கூறும் பொழுது :

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கி வைத்துள்ளோம்;. ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (17:82)

யார் தங்களது உளநோயைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்கள் மேற்கண்ட இறைவசனத்தை சிந்தித்துப் பார்க்கட்டும்..!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், திருமறைக் குர்ஆனை ஓதும் பொழுது அதன் அர்த்தத்தையும், விளக்கத்தைப் பற்றியும் சிந்திக்கக் கூடியவர்களாகவும், இன்னும் இரவு நேரத் தொழுகைகளில் திருமறைக் குர்ஆன் தரும் விளக்கத்தைப் பற்றி அவர்கள் சிந்தித்து அதனை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருமுறை, அவர்கள் இரவுத் தொழுகைக்காக நின்றார்கள். அப்பொழுது திருமறைக் குர்ஆனில் இருந்து ஒரே ஒரு வசனத்தை மட்டுமே ஓதினார்கள், அந்த வசனத்தை அதிகாலைத் தொழுகை வரைக்கும் ஓதினார்கள், அது தவிர வேறு வசனத்தை ஓதவே இல்லை. அந்த வசனத்தின் அர்த்தத்தைப் பார்ப்போம்:

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்'' (என்றும் கூறுவார்). (சுநிழசவநன டில யுhஅயனஇ 4ஃ149; ளநந யடளழ ளுகையவ யட-ளுயடயயா டில யட-யுடடியயniஇ p. 102).

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனின் அர்த்தங்களையும், அது கூறும் போதனைகளையும் எவ்வாறு சிந்தித்திருக்கின்றார்கள் என்பதற்கு இப்னு ஹிப்பானில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த நபிமொழியே சிறந்த சான்றாகும்.

அதாரா என்பவர் கூறுகின்றார் : நானும், உபைதுல்லா இப்னு உமைர் அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டிற்குச் சென்று, ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டதிலேயே உங்களை மிகவும் கவர்ந்ததொரு செயல் ஒன்றைக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம். (ஆயிஷா (ரலி) அவர்கள்) அழுதவர்களாகக் கூறினார்கள், ஒரு (நாள்) இரவில் (படுக்கையிலிருந்து) எழுந்த அவர்கள் கூறினார்கள், ஓ..! ஆயிஷாவே..! எனதிறைவனை வழிபட விடுங்கள். நான் கூறினேன், 'இறைவன் மீது சத்தியமாக, 'நான் உங்கள் அருகில் இருக்கவே விரும்புகின்றேன், இன்னும் உங்களுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்குமோ அதனையும் நான் விரும்புகின்றேன்' என்று கூறினேன். எழுந்த அவர்கள், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டவர்களாக, பின் தொழுகை;குத் தயாரானார்கள். அவர்களது பாதங்கள் நனையும் அளவுக்கு அழுதவர்களாகவும், இன்னும் அழுது அழுது அவர்கள் நின்று கொண்டிருந்த தரைப்பகுதி ஈரமாகும் அளவுக்கு அழுது கொண்டே இருந்தார்கள். (அப்பொழுது) பிலால் அவர்கள் அதிகாலைத் தொழுகைக்காக பாங்கு சொல்வதற்காக வந்தவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழுவதைப் பார்த்து விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களே, இறைவன் உங்களது முன் பின் பாவங்களை மன்னித்து விட்ட நிலையில், நீங்களுமா அழுது கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு, எனது இறைவனுக்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று பதில் கூறினார்கள். இன்றைய இரவில் எனக்கு சில குர்ஆனின் வசனங்கள் இறக்கி அருளப்பட்டது, அந்த வசனங்களை ஒருவர் வாசித்தாரென்று சொன்னால், அதனுடைய விளக்கத்தைப் பற்றி நிச்சயமாக சிந்திக்காமல் இருக்க மாட்டார். அந்த வசனம் இது தான் :

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து.., (3:190-191)

மேற்கண்ட வசனம் அறிவுறுத்துவது என்னவென்றால், இறை வசனங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது கட்டாயக் கடமை என்கின்றது.

குர்ஆன் ஓரிறைக் கொள்கையைப் பற்றிப் பேசுகின்றது, இன்னும் நற்பேறுகளுக்கான வாக்குறுதிகளும், தண்டனைகளைப் பற்றி எச்சரிக்கைகளும், சட்ட திட்டங்களையும், அறிக்கைகளையும், வரலாற்றுச் சம்பவங்களையும், பண்புகளையும், இன்னும் ஒழுக்க விழுமியங்களையும் பேசுகின்றது, இவை யாவும் ஒருவனது மனநிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.

சில அத்தியாயங்கள் மற்ற அத்தியாங்களை விட அதிமான பயத்தையும், அச்சத்தையும் ஊட்டி விடுகின்றன. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சூரா) அல் ஹுத் ம் அதனது சகோதரிகளும், முதுமைக்கு முன்பே என்னை நரைக்க வைத்து விட்டன என்று கூறியுள்ளார்கள். (அல் சில்சிலத்துஸ் ஸஹீஹ், 2-679).

இன்னுமொரு அறிவிப்பின்படி,

ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத் மற்றும் அம்ம யத ஸாஅலூன் மற்றும் இதஷ் ஷம்ஸு குவ்விரத் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (திர்மிதீ, 3297, அல் சில்சிலத்துஸ் ஸஹீஹ் 955).

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி நரைக்கும் அளவுக்கு அந்த அத்தியாயங்களில் காணப்படக் கூடிய இறைநம்பிக்கையின் நிதர்சனங்களும் மற்றும் அதனை ஏற்றுக் கொண்ட மனிதன் மீது அது சுமத்தும் மிகப் பெரிய பொறுப்புகளும், கடமைகளும், இவற்றை நினைத்து விட்ட மனிதனின் மனதில் அச்சத்தை நிரப்பி, அந்த அச்சத்தின் விளைவு தான் முடி நரைப்பதன் காரணமாகும் என்று இங்கு நமக்கு விளக்கிக் காட்டப்படுகின்றது.

நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக. வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான். இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக் கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேரறவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள். (11:112-113)

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் இறைவசனங்களையும், அது சுமத்துகின்ற பொறுப்புகள், கடமைகள் மற்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதையும் சிந்தித்துப் பார்த்து, அதன் காரணமாக அவர்கள் அச்சத்தால் அலைக்கழிக்கப்பட்ட சம்பவங்கள் பலவற்றை இஸ்லாமிய வரலாறு தன்னுள் பதிவு செய்து வைத்திருக்கின்றது.

அபுபக்கர் (ரலி) அவர்கள், மிகவும் இளகிய மனதுடையவர், மக்களுக்கு இமாமாக நின்று தலைமையேற்று தொழ வைப்பார் என்று சொன்னால், இறைமறையின் வசனங்களை சிந்தித்து விட்டு, அழ ஆரம்பித்து விடுவார், இன்னும் அவராலேயே அவரை நிதானத்திற்குக் கொண்டு வர இயலாமல் போன சம்பவங்களும் உண்டு.

உமர் (ரலி) அவர்கள், கீழ்க்கண்ட வசனத்தை ஓதி அதனைப் பற்றி சிந்தித்தன் காரணமாக அச்சத்தால் அவருக்குக் காய்ச்சல் கண்டு விட்டது.

நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும். அதனைத் தடுப்பவர் எவருமில்லை. (52:7-8) (வுhளை சநிழசவ யனெ வைள ளையெயன யசந in வுயகளநநச ஐடிn முயவாநநசஇ 7ஃ406).

யாக்கூப் (அலை) கூறுவதாக இறைவன் தன்னுடைய திருமறையிலே அருளியிருக்கும் வசனங்களை தொழுகையில் இமாமாக முன்னின்று ஓதும் பொழுது, அவர்கள் கண்ணீர் விட்டு அழுவதை அவரது விசும்பல் சப்தம் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும், என்று அவரது தோழர்கள் கூறுகின்றார்கள்.

''என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (12:86) (ஆயயெயஙiடி 'ருஅயச டில ஐடிn யட-துயறணiஇ 167)

உதுமான் (ரலி) அவர்கள் கூறுவார்கள் : நம்முடைய உள்ளங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பதற்கு, அல்லாஹ்வினுடைய வேத வசனங்கள் ஒன்றைத் தவிர வேறு எதுவும் நமக்கு தேவையற்றது.

உதுமான் (ரலி) அவர்கள் அநீதமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவர்களது இரத்தம் திருக்குர்ஆனின் மீது தான் படிந்தது. இன்னும் நபித்தோழர்கள் எவ்வாறு திருமறைக் குர்ஆனை அணுகினார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

அய்யூப் என்பவர் கூறுகின்றார் ஸயீத் (இப்னு ஜுபைர்) அவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை இருபது தடவைகள் ஓதியதை நான் செவிமடுத்திருக்கின்றேன்.

அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள். அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (2:281) (ளுலையச யு'டயயஅ யட-ரேடியடய'இ 4ஃ324).

இப்றாஹீம் இப்னு பஸ்ஸார் அவர்கள் கூறுகின்றார்கள் : மரணத்தின் இறுதிக் கட்டத்தில் கீழ்க்கண்ட வசனத்தை அலீ இப்னு ஃபுதைல் அவர்கள் ஓதிக் கொண்டிருந்தார், அந்த வசனத்தின் கீழ்க்கண்ட வரிகள் வந்த பொழுது அவரது உயிர் பிரிந்தது. அவருடைய மரண அடக்கத்தில் கலந்து கொண்டு அவருக்காக பிரார்த்தித்தவர்களில் ஒருவனாக நான் இருந்தேன். அல்லாஹ் அவருக்குக் கருணை காட்டட்டும். அந்த வசனம் :

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், ''எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்'' எனக் கூறுவதைக் காண்பீர். (6:27) (ளுலையச யு'டயயஅ யட-ரேடியடய'இ 4ஃ446).

திருமறைக் குர்ஆனில் சில வசனங்கள் இருக்கின்றன. அந்த வசனங்கள் ஓதப்படும் பொழுது, ஸுஜுது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரி ஸுஜுது செய்யும் பொழுதும், அதன் தாக்கமானது அவர்களிடம் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டது. ஒருவர் கீழ்க்கண்ட வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.

அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்;. இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். (17:109)

இந்த இடத்தில் அவர் ஸுஜுது செய்ய வேண்டும். ஸுஜுதும் செய்தார். பின்பு அவர் தன்னைத் தானே இப்படிக் கேட்டுக் கொண்டார். 'நான் (இப்பொழுது)செய்தது ஸுஜுது, ஆனால் அழுகை எங்கே?'

குர்ஆனின் சிறப்பு அம்சமே, அதில் உதாரணங்களும், நல்லுணர்ச்சி பெற்றுக் கொள்ளக் கூடிய அறிவுரைகளும் அதில் விரவிக் கிடப்பது தான். அதனை நாம் சிந்தித்துப் பார்த்து, அதிலிருந்து நாம் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கின்றான்.

மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான். (14:25)

மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.(59:21)

ஒருமுறை ஒரு இறையச்சமுள்ள நல்லடியார், அல்லாஹ்வின் திருவசனங்களை ஓதிக் கொண்டிருந்த பொழுது, அது தரும் விளக்கங்களை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை, எனவே அவர் அழ ஆரம்பித்து விட்டார். அவரிடம் கேட்கப்பட்டது, எதற்காக நீங்கள் அழுகின்றீர்கள்? அவர் கூறினார், அல்லாஹ் கூறுகின்றான் :

இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (29:43)

என்னால் அதன் உதாரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அறிவுள்ள மனிதர்களில் ஒருவனாக இல்லையே..! நான் நல்லறிவு பெறாமல் நான் என்னுடைய நேரங்களை வீணடித்து விட்டேனே', அதற்காகத் தான் அழுகின்றேன் என்று கூறினார்.

திருமறைக் குர்ஆனில் நாம் நல்லுணர்ச்சி பெறுவதற்காக பல இடங்களில் பல்வேறு உதாரணங்களை அல்லாஹ் நமக்குக் கூறுகின்றான் :

இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (2:17)

அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வதுதைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – (7:176)

அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; (62:5)

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது.

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). (29:41)

எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை; புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது; இதுவெ வெகு தூரமான வழிகேடாகும். (14:18)

இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்; (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (11:24)

(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.

14:26 (இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நற்கும் தன்மையுமில்லை.

அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்;. (6:99)

அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். (24:35)

அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்; பிறிதொருவனுக்கு உடமைக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை (16:75)

அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? (39:29)

மேலே நாம் கொடுத்துள்ள இறைவசனங்களை நமது கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதனைப் பற்றிச் சிந்திப்பதன் மூலம் இறைவனது உவமானங்களையும், அது வலியுறுத்துகின்ற உண்மைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களது இதயம் இறுகி, எதற்கு இளகாத தன்மையுடையதாக மாறி விட்டதென்று சொன்னால், அந்தக் கடினத்தன்மையை மாற்றிக் கொள்வதற்கு, இமாம் இப்னு அல் கய்யிம் (ரஹ்) அவர்கள் சில வழிமுறைகளை நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். அவையாவன :

இரண்டு விஷயங்களை அதற்கு நாம் கடைபிடித்தாக வேண்டும். முதலாவது, உங்களது இந்த உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரங்களின் மீதும் சுற்றி வந்து கொண்டிருக்கின்ற உங்களது இதயங்களை, அந்த மகத்தான மறுமையின் பக்கம் திருப்புங்கள். இன்னும் உங்களது கவனங்களை திருமறையின் மீது திருப்புங்கள், அதன் அர்த்தங்களின் மீது கவனம் செலுத்துங்கள், இன்னும் இவை யாவும் எதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு அருள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு வசனம் வசனமாக அதன் உள் அர்த்தங்களைத் தோண்டித் துருவி ஆய்வு செய்யுங்கள், அதிலிருந்து உங்களது இதய நோய்க்கான மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். இறைவசனங்கள் யாவும் நம்முடைய இதய நோயைக் குணப்படுத்துவதற்காகவே அருள் செய்யப்பட்டிருக்கின்றன, எனவே அதன் மூலம் நீங்கள் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வீர்கள், இறைவன் நாடினால்...!

இறைவன் என்பவன் ஒருவன் இருக்கின்றான், அவன் வலிமை மிக்கவன் என்பதன் மீது நீங்கள் பயபக்தி கொள்ள முயற்சி செய்யுங்கள். அவனது பெயர்களை அறிந்து கொள்ளுங்கள், அவனது தன்மைகளையும், அதன் அர்த்தங்களையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அதன் மூலம் உங்களிடமும், உங்கள் செயல்களிலும் நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும், அந்தத் தாக்கங்கள் உங்களது நோயைக் குணப்படுத்தவல்லவைகளாக இருக்கும். நமது இதயம் இருக்கின்றதே, அது நம்முடைய அனைத்து அலுவல்களையும் நிர்வகிக்கக் கூடியதாக இருக்கின்றது, அது மனநிலைத் தடுமாற்றத்தை எதிர்த்துப் போர் புரியக் கூடிய யுத்த வீரனாகவும், இன்னும் இறைவனது கட்டளைகளை ஏற்றுப் பின்பற்றுகின்ற அடியானாகவும் மாறுவதற்குக் காரணமாக இருக்கின்றது. எனவே, அந்த இதயமானது உறுதியான ஆன்மீகத் தேடலில் இருக்குமானால், அது நிறைந்த இறைநம்பிக்கை கொண்டதாக இருக்கும். இன்னும் அதில் இந்த உலகத்தின் ஆசாபாசங்கள் புகுந்து விட்டதென்று சொன்னால், அதில் சீர்கேடுகள் தான் நிரம்பி இருக்கும். அதுவே நம்முடைய செயல்களைப் பாழாக்கி விடக் கூடியதாகவும் இருக்கும்.

திருமறைக்குர்ஆனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் போதனைகளும் இறைவனது வல்லமைகள் பலவற்றைப் பேசுகின்றன. நமக்கு விளக்குகின்றன. முஸ்லிம்கள் அதனை வாசிக்கும் பொழுது, அதில் காணப்படக் கூடிய இறைவனது வல்லமைகள், அவனது தன்மைகள், மிகப் பெரியவனான, அனைத்தையும் கேட்டறியக் கூடியவனும், பார்க்கக் கூடியவனுமான அவனைப் பற்றி அச்ச உணர்வானது, அவனது இதயத்தை உலுக்கி விடக் கூடியதாக இருக்கும். அந்த அச்ச உணர்வானது இவனை முழந்தாழிடச் செய்து விடும், அந்த வல்லமைக்கு முன்னால் இவனைச் சிரம்பணியச் செய்து விடும். இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தன்மை அதிகரித்து விடும்.

அவனுடைய பல திருநாமங்கள் திருமறைக் குர்ஆன் நெடுகிலும் எதிரொலிக்கின்றன.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன் வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (59:23-24)

அல்லாஹ் நித்திய ஜீவன், இறப்பு என்பதே அவனுக்குக் கிடையாது, ஆனால் மனிதனும், ஜின் வர்க்கமும் இறந்து போகக் கூடியவைகளாக இருக்கின்றனர். அவனே தனது அனைத்து அடிமைகளின் மீதும் முழுக் கட்டுப்பாடு மிக்கவனாக இருக்கின்றான். வானவர்கள் தனது இறைவன் மீதுள்ள பிரியத்தின் காரணமாக அவனது புகழைத் துதித்துக் கொண்டிருப்பது போலவே, இடியும் தனது எஜமானனாகிய அல்லாஹ்வின் புகழை எடுத்தோதுகின்றது. அவனே அனைத்தின் மீதும் அதிகாரமிக்கவன், அவனே அனைத்தின் மீது நீதி செலுத்தக் கூடியவன். அவன் சுய ஆதிக்கம் மிக்கவன், அவனை அரிதுயிலும் பீடிக்காது. அவன் அனைத்தின் மீதும் முழு ஞானத்தைப் பெற்றவன். அவன் கள்ளத் தனமானவர்களை அறிகின்றான், இன்னும் உங்களது இதயங்கள் மூடி மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் அறியக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் அல்லாஹ் தனது ஞானத்தின் வல்லமை குறித்து, தனது வார்த்தைகளால் இந்த மனித சமுதாயத்திற்கு அருள் செய்திருப்பதைப் பாருங்கள் :

அவனிடமே மறைவனவற்றின் திறவு கோல் கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலுமு; கரையிலும் கடவிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (6:59)

அவனது வல்லமையில் ஒரே ஒரு பண்பைக் குறித்து நமக்கு இவ்வாறு திருமறைக் குர்ஆனில் இருந்து விளக்கப்படுகின்றது :

அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சரட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன். (39:67)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமைநாளின் பொழுது இறைவன் இந்த பூமியின் இயக்கத்தை நிறுத்தி விட்டு, இன்னும் வான மண்டலங்களை தனது வலக் கரத்தில் சுருட்டிப் பிடித்துக் கொண்டு, நானே அரசன், இந்த பூமியின் அரசர்கள் எங்கே? என்று கேட்பான். (புகாரீ 6947)

மூஸா (அலை) அவர்களின் இந்த சம்பவத்தை நினைத்துப் பார்ப்பவர்களது இதயங்கள் அச்சத்தால் நடுநடுங்கக் கூடியதாக இருக்கும். மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள் :

மூஸர் ''என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், ''மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!'' என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். (7:143)